28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
095f5390b3
Other News

தெரிஞ்சிக்கங்க…பனங்கிழங்குவுடன் மிளகை உட்கொண்டால் ஏற்படும் அதிசயம் என்ன?

பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அந்த காலத்தில் கிராமங்களில் இதனை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமையாகும். சர்க்கரை நோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்சனை இருப்பவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மலக்கழிவை வெளியேற்ற இயலாமல் அதாவது மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் வெயிலில் காய வைத்த பனங்கிழங்கை (பச்சையாக) எடுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஈரமாவு ஆக அரைத்து தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால் இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நன்கு வேகவைத்த கிழங்கின் மேல் தோல் பகுதியையும், நடுப்பகுதியில் உள்ள தும்பையும் நீக்கி சாப்பிட வேண்டும். மேலும், உடல் இளைத்தவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும். உடலுக்கு குளிர்ச்சித்தன்மை மற்றும் உடலின் வலிமை அதிகரிக்கும். பனங்கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, வெயிலில் காய வைத்து, பின் அதை அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து அதிகமாகும்.

பனங்கிழங்கில் பித்தம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. எனவே இதைச்சாப்பிட்டப் பின் மிளகு ஐந்து எடுத்து வாயில் போட்டு மென்றுவிட வேண்டும். மற்றபடி பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியம் உண்டாகும்.

Related posts

உங்க ராசிப்படி நீங்கள் எந்த ராசிக்காரர்களை காதலிக்கவே கூடாது தெரியுமா?

nathan

அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு கூட ஓகே; ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்

nathan

வீட்டில் இவற்றையெல்லாம் செல்ல பிராணிகளாக வளர்க்கக் கூடாது…

nathan

நடிகர் புகழ் மகளின் தொட்டில் விழா..

nathan

இஸ்ரேல் போரில் உயிரிழந்த இலங்கைப் பெண்!!

nathan

கதையை மொத்தமாக மாற்றிய முன்னாள் கணவனின் வருகை

nathan

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கருப்பு அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்

nathan

இந்தியாவிலேயே முதன் முறையாக அப்பாவும் – மகளும் ஒரே போர் விமானத்தை இயக்கி சாதனை!

nathan

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கடல் பட கதாநாயகி

nathan