28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
large 1332527677
மருத்துவ குறிப்பு

கடலை எண்ணெய்யில் அடங்கியுள்ள சத்துக்கள் என்னென்ன?

சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை தன்னகத்தே அடக்கி உள்ளது.
* கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடலை எண்ணெயில் உடலுக்கு 884 கலோரிகள் ஆற்றல் கிடைக்கிறது.

* அதிக அளவில் லிப்பிடுகள்(Lipids) நிறைந்தது. பூரிதமான கொழுப்புகள் உடலில் சேரவும், கெட்ட கொழுப்பான கொலஸ்ட்ரால் உடலில் சேராமல் காக்கவும் இவை உதவும்.

* ‘ஒமேகா 6’ எனப்படும் கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது.

* ‘பீட்டா சிட்டோஸ்டிரால்’ எனும் துணை ரசாயன பொருள் கடலை எண்ணெயில் உள்ளது. இது கொலஸ்ட்ராலை உறிஞ்சி அகற்றும் தன்மை கொண்டது.

எனவே இதனை தினமும் 0.8 கிராம் உடலில் சேர்த்து வந்தால்இதய நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

* கடலை எண்ணெயில் விட்டமின்-இ’மிகுந்துள்ளது. விட்டமின் இ, லிப்பிடுகளில் கரையும் நோய் எதிர்ப்பு பொருளாகும். செல் சவ்வுகள் வளர்ச்சி அடையவும், ஆக்சிஜன்பிரீ-ரேடிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதிலும் இது பங்கெடுக்கிறது.

பயன்பாடுகள்

* ஆசிய நாடுகளில் சமையல் எண்ணெயாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

* 450 டிகிரி பாரன்ஹீட்(Paranheat) வெப்ப நிலையில்தான் கடலை எண் ணெய் கொதிக்கும் என்பதால் பண்டங்கள் சமைக்க ஏற்றது, வறுத்தெடுக்கும் உணவுகள் செய்ய கடலை எண்ணெய் சிறந்தது.

* நீண்டகாலம் கெட்டுப் போகாத தன்மை கொண்டது என்பதால் பல நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம். ஆனால் சிலருக்கு வாந்தி போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவரின் ஆலோசனைக்குப் பின் பயன்படுத்தலாம்.

* சாதாரணமாக நல்ல மஞ்சள் நிறம் கொண்ட இந்த எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டபின் இளமஞ்சள் நிறமாக காணப்படும்.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுவதை தடுக்கும். மாசுப் பொருட்களும் நீக்கப்பட்டு இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை அனைவரும் பயன்படுத்தலாம்.
large 1332527677

Related posts

சிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்

nathan

பெண் எந்த வயதில் அழகு

nathan

பெண்களே உஷார்! மாதவிடாய் காலம் முடிந்த பிறகும் உதிரப்போக்கு ஏற்படுகிறதா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரே வாரத்தில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிய கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்!!!

nathan

40 வயதில் தொடக்கத்தில் கண்களுக்கு சில எளிமையான பயிற்சிகள்

nathan

இணைய காதலில் சிக்கும் பெண்கள் தப்பிக்க என்ன வழி?

nathan

பற்களுக்கு அடியில் வெங்காயத்தை வைப்பதால் உடல் பெறும் நன்மைகள் தெரியுமா?

nathan

அலுவலக வேலையை திட்டமிட்டு செய்யுங்க

nathan

ஒயின் குடித்தால் சருமம் பளபளக்குமா?

nathan