ஆரோக்கிய வாழ்க்கைக்கு சில மருத்துவகுறிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்,
1. தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தேள் கொட்டிய விரலை உப்புக் கரைசல் நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் வலி குறையும்.
3. வெயில் சூட்டினால் வயிற்று வலிக்கு கசகசாவை மிக்சியில் அரைத்து கொதிக்க வைத்து, பாலோடு சேர்த்து, துளி, சர்க்கரை போட்டுச் சாப்பிட, வயிற்றுவலி பறந்து விடும்.
4. ரோஜா இதழ்களுடன் பனை வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். வாய்மணக்கும்.
5. இரவில் அரை டம்ளர் மோரில் சிறிது வெந்தயம் ஊறவைத்து, அதை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் சூடு குறையும்.
6. கடைந்தெடுத்த மோரில் அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து, சிறிது வெங்காயச்சாறு, பெருங்காயம் சேர்த்துக் குடிக்க உடல் சோர்வடையாது, அதிகமாக வியர்த்தாலும் களைப்பு தெரியாது.
7. மாவிலை வயிற்றுப் போக்கையும், மாம்பூ வெள்ளை வெட்டை நோயையும் நீக்கும். மாங்காய் ஸ்கர்வி நோயை விரட்டுகிறது.மாம்பழம், மாம்பழச்சாறு உடலுக்கு ஊட்டச்சத்தை தரக்கூடியது.
8. விட்டமின் ஏ உள்ள பப்பாளி, காரட், முருங்கைக்கீரை, அகத்தி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால், என்றும் மாறாத இளமைப் பொலிவு உண்டாகும்.