பிறப்புறுப்பு அரிப்பு என்பது பெண்கள் பொதுவாக எதிர்கொள்ளும் ஒரு சங்கடமான பிரச்சினையாகும். இது பல காரணங்களுக்காக நிகழலாம்.
குறிப்பாக இறுக்கமான உள்ளாடைகள், அந்த பகுதியில் அதிகப்படியான வியர்த்தல், உடல் பருமன், நாப்கின் அலர்ஜி, ஆகியவை யோனி பகுதியில் முடி உமுடிகளை நீக்கும் போது ஏற்படலாம்.
கூடுதலாக, உடலுறவின் போது பிறப்புறுப்பு உராய்வு, சுயஇன்பம் மற்றும் கெமிக்கல் நிறைந்த வெஜினல் காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அதிலுள்ள ஆல்கஹாலால் போன்றவற்றால் கூட அரிப்பு ஏற்படும்.
அறிகுறிகள் அரிப்பு, வலி, சரும பிளவுகள், சிவத்தல், தோல் உரிதல், தொடும் போது வலி மற்றும் அரிப்பு ஏற்படுதல் போன்றவை அறிகுறிகளாகும்.
இது பெரும்பாலும் உங்களுக்கு அசெளகரியமும் அல்லது தொந்தரவு ஏற்படுத்தும். இதை ஆரம்ப கட்டத்தில் சரிசெய்ய பரிந்துரைக்கிறோம்.
இதற்கு இயற்கை வைத்தியங்களும் உள்ளன. எனவே அவற்றை அறிந்து கொள்வது நல்லது. இப்போது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று பார்ப்போம்.
தேங்காய் எண்ணெய் அனைத்து தோல் பிரச்சினைகளையும் போக்க சிறந்தது.பாதிப்புகள் அதிகமாகும் முன்பாக கொஞ்சம் தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட சருமத்தில் ஒரு இரண்டு தடவை என போட்டு வந்தால் போதும் யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு எல்லாம் காணாமல் போகும்.
1 டீஸ்பூன் பட்டர், 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என செய்து வாருங்கள்.
யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பை போக்க ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை எடுத்து கைகளைக் கொண்டு நசுக்கியோ அல்லது பேஸ்ட்டாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள்.
கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என சில நாட்களுக்கு செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
தடுக்கும் முறைகள்
இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.
குளித்து முடித்த பிறகு பிறப்புறுப்புப் பகுதியில் கொஞ்சம் பேபி பவுடர் போட்டுக் கொள்ளுங்கள். நன்றாக அந்தப் பகுதியை உலர்த்தி விடுங்கள்.
உடலுறவின் போது உராய்வு ஏற்படாமல் இருக்க எண்ணெய் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
ஈரமான துணியை வெகுநேரம் அணியாதீர்கள்.
பிறப்பிறுப்பில் முடிகளை நீக்கும்போது கவனமாக எடுங்கள்