28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
yhiyiy
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் C மற்றும் ஆண்டிஆக்ஸைட் அதிகளவு உள்ளதால் இவற்றின் தோலை முக அழகிற்கு பயன்படுத்தும் போது சருமம் பொலிவுடனும், வெண்மையாகவும் காணப்படும்.

ஆரஞ்சு பழத்தோல் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், இவற்றை நம் முகத்தில் பேக்காக போடும்போது முகத்தில் ஏற்படும் தொற்றுக்களை சரி செய்ய உதவுகிறது. மேலும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் C மற்றும் ஆண்டிஆக்ஸைட் அதிகளவு உள்ளதால் இவற்றின் தோலை முக அழகிற்கு பயன்படுத்தும் போது சருமம் பொலிவுடனும், வெண்மையாகவும் காணப்படும். குறிப்பாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இந்த ஆரஞ்சு பழத்தை(ஆரஞ்சு தோல் பொடி) முகத்திற்கு பயன்படுத்தும் போது முகத்தில் ஏற்படும் பருக்களை தடுப்பதற்கு மிகவும் உதவுகிறது.

yhiyiy
ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் : 1
நம் சருமத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் மற்றும் சரும அழகை அதிகரிக்கவும் ஆரஞ்சு பழத்தோல் மற்றும் பாதாம் உதவுகிறது.

எனவே ஆரஞ்சு பழத்தோலை இனி தூக்கி எரியாமல் வெயிலில் நன்றாக காயவைத்து, பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.

இந்த ஆரஞ்சு பழத்தோல் பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும், பின்பு பாதாம் பருப்பையும் நன்றாக அரைத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.

இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். பின்பு அதனுடன் இரண்டு ஸ்பூன் பசும் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை முகத்தில் தடவி, நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை முகத்தில் இந்த கலவையை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ, சருமம் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும், வெண்மையாவும் காணப்படும்.

இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வரலாம்.

ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் : 2
ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். ஆரஞ்சு தோல் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.

அதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர சருமத்தில் ஏற்படும், கோடுகள் மற்றும் சுருக்கங்கள் நீக்குவதற்கு உதவியாக இருக்கும்.

அதுமட்டும் இன்றி சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு உதவியாக இருக்கிறது.
ygyu
ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் : 3
ஆரஞ்சு தோல் நன்றாக காயவைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த ஆரஞ்சு தோல் பொடியுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை, 1/2 ஸ்பூன் தேன், 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை சருமத்தில் தடவி 20 நிமிடம் வரை வைத்திருந்து, பின்பு சருமத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ சருமம் பொலிவுடன் காணப்படும்.

இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வரலாம்.

ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் : 4
ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு தோலை எடுத்துக்கொள்ளவும், அதனுடன் ஒரு ஸ்பூன் பசும்பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

இந்த முறையை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், எண்ணெய் பசை கொண்ட சருமம், மேடுபள்ளம் கொண்ட சருமம் மற்றும் பருக்கள் ஆகிய பிரச்சனைகளை சரி செய்யும்.

அதுமட்டும் இன்றி சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இதனால் சருமம் எப்பொழுதும் பொலிவுடன் காணப்படும்.

ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் : 5
ஆரஞ்சு பழத்தின் தோலின் பயன்: ஆரஞ்சு தோலை அரைத்து கொள்ளவும். பின்பு வேப்பிலையை அரைத்து பேஸ்ட்டாக வைத்து கொள்ளவும்.

ஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல், இரண்டு ஸ்பூன் வேப்பிலை பேஸ்ட் மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து இந்த கலவையை சருமத்தில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் வரை காத்திருந்து பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசை பிரச்சனை சரியாகும். மேலும் சருமத்தை எப்போதும் அழகாகவும் பொலிவுடனும் வைத்திட இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Related posts

மெலிந்து போன நடிகர்… கண் கலங்கி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மோகன் லால்!

nathan

முடக்கிப்போடும் மூட்டுவலி… காரணமும்.. தீர்வும்..தெரிஞ்சிக்கங்க…

nathan

கசிந்த தகவல் – செல்வராகவனுக்கு என்ன பிரச்சனை? இப்படி ஒரு ட்விட் போட்டிருக்காரே

nathan

அன்றாட வாழ்க்கையில், அழகு… ஆரோக்கியம்!

nathan

தோலிலுள்ள‌ புள்ளிகளுக்கான 4 பயனுள்ள சிகிச்சை வழிகள்,முக அழகுக் குறிப்புகள்,பெண்களுக்கான அழகு

nathan

அடேங்கப்பா! அஜித்தின் மனைவி ஷாலினி தங்கையுடன் மாடர்ன் உடையில்…

nathan

அழகு குறிப்புகள்:கர்ப்பிணிகள் ‘முகப்பருவிற்கு’ சிகிச்சை செய்யும் போது…

nathan

அழகு டிப்ஸ்… டிப்ஸ்…

nathan

சரும பாதுகாப்பு டிப்ஸ்

nathan