24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
30 lychee pineapple smoothie
பழரச வகைகள்

சுவையான லிச்சி அன்னாசி ஸ்மூத்தி

கோடையில் வெயிலின் தாக்கத்தை தணிக்க லிச்சியை சாப்பிடலாம். இந்த பழம் மிகவும் சுவையுடன் இருக்கும். அதிலும் இதனை அன்னாசியுடன் சேர்த்து ஸ்மூத்தி செய்து சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும். இதனை செய்வது மிகவும் ஈஸி.

இங்கு அந்த லிச்சி அன்னாசி ஸ்மூத்தியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

லிச்சி – 4 (தோலுரித்து, விதைகளை நீக்கியது)
அன்னாசி – 100 கிராம்
கெட்டியான தயிர் – 100 கிராம்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
வென்னிலா ஐஸ் க்ரீம் – 1 ஸ்கூப்
ஐஸ் கட்டிகள் – 2

செய்முறை:

முதலில் மிக்ஸியில் லிச்சியை போட்டு, பின் அன்னாசியின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி, அதனையும் மிக்ஸியில் போட்டு, தயிர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பின்னர் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் ஐஸ் கட்டிகளைப் போட்டு, ஐஸ் க்ரீமை சேர்த்து தேன் ஊற்றி கலந்து பரிமாறினால், லிச்சி அன்னாசி ஸ்மூத்தி ரெடி!!!

Related posts

ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக்

nathan

உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்

nathan

வெள்ளரிக்காய் மோர்

nathan

கோடையில் குளுகுளு கிவி – புதினா ஜூஸ்

nathan

மாம்பழ மில்க் ஷேக்

nathan

அரேபியன் டிலைட்

nathan

வாழைப்பழம் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் மில்க் ஷேக்

nathan

ராகி சாக்லேட் மில்க்க்ஷேக்

nathan

சுவையான கேரட் ஜூஸ்

nathan