25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
24 chilli paneer
சமையல் குறிப்புகள்

சூப்பரான சில்லி பன்னீர் ரெசிபி

பன்னீர் பிரியர்களுக்கு ஒரு அருமையான மற்றும் காரசாரமான சைனீஸ் ஸ்டைல் ரெசிபி ஒன்றை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது தான் சில்லி பன்னீர். இந்த சில்லி பன்னீர் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டிருப்பதுடன், அருமையான சுவையையும் கொண்டது.

அந்த சில்லி பன்னீர் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியானால் தொடர்ந்து படித்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 500 கிராம்
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 5 பற்கள்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
குடைமிளகாய் – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 4 (நீளமாக கீறியது)
வெஜிடேபிள் ஸ்டாக் – 1/2 கப்
சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
அஜினமோட்டோ – 1 சிட்டிகை
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு, உப்பு, மிளகு தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீர் துண்டுகளை சோள மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டுகளை தட்டிப் போட்டு சிறிது நேரம் வதக்கி, பின் அதில் வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து, மிதமான தீயில் பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் பச்சை மிளகாய், வெஜிடேபிள் ஸ்டாக் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பின் அஜினமோட்டோ, சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவை, 1/4 கப் தண்ணீரில் கலந்து, அதனை வாணலியில் ஊற்றி 4-5 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும்.

இறுதியில் அதில் பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், காரமான சில்லி பன்னீர் ரெடி!!!

Related posts

சுவையான பிரெட் பிரியாணி – செய்வது எப்படி?

nathan

சுவையான உருளைக்கிழங்கு பீன்ஸ் சப்ஜி

nathan

சுவையான பிரட் சாட் ரெசிபி

nathan

சுவையான பட்டர் குல்ச்சா

nathan

சுவையான வெஜிடேபிள் குருமா

nathan

தினமும் 2 கப் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

கிளப் சாண்ட்விச் பரோட்டா சாப்பிட்டதுண்டா? இன்றே செய்து சாப்பிட்டு பாருங்கள்…

sangika

தெருவே மணக்கும் இறால் பெப்பர் ப்ரை…

nathan

சூப்பரான பனங்கற்கண்டு பால் பொங்கல் ரெடி!…

sangika