25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
oil 01
சரும பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் மசாஜ்

தொப்புள் உடலில் உள்ள சிறிய புள்ளி என்பதை விட, பல்வேறு பிரச்னைகளுக்கு திறவுகோலாக அமைகிறது. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி, உடலைப் பாதுகாப்போம்.

தொப்புள் உறவு நமது தாயிடம் இருந்து கிடைத்த அன்புப் பரிசு. அப்பகுதியைச் சுற்றி எண்ணெய் மசாஜ் செய்வதால், உதட்டில் ஏற்படும் வெடிப்பு முதல் மாதவிடாய் வலி வரை நிவாரணமாக அமைகிறது.

நம்மில் பலருக்கும் தெரியாத தொப்புளின் நன்மைகளை குறித்து தற்போது அறிந்து கொள்ளலாம்.

எண்ணெய் மசாஜ் நன்மைகள்

பொதுவாக கடுகு, நெய் அல்லது தேங்காய் எண்ணெய்யைத் தொப்புளில் மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதே போல, தேயிலை மரம், எலுமிச்சை, கிராஸ்பீட் மற்றும் பாதாம் எண்ணெய் போன்ற சாறுகளைக் கொண்ட எண்ணெய்யை உபயோகிப்பது தொப்புளைச் சுத்தம் செய்திட பெரிதும் உதவுகிறது. அங்கு எண்ணெய் போடுவதால் நச்சுத்தன்மை அழிக்கப்பட்டு ஆராக்கியமான சருமம் கிடைக்கிறது.

எப்படி செய்ய வேண்டும்

முதலில் தொப்புளை சுற்றி எண்ணெய் ஊற்ற வேண்டும். பின்னர், அதனைச் சுற்றி சுழற்சி முறையில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். தினந்தோறும் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும் அல்லது குளிப்பதற்குப் பின்பும் மசாஜ் செய்வதால் நல்ல ரிசல்ட் கிடைத்திடும். மேலும், இரவில் எண்ணெய் தடவுவது நல்ல பலனை தரும்.

தொப்புள் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

மாதவிடாய் பிரச்னை

மாதவிடாய் காலங்களில் எண்ணெய் மசாஜ் செய்வது, வலியைக் குறைக்க பெரும் உதவியாக அமைகிறது.

அழுக்கு நீங்கி சுத்தமாகும் :

தொப்புளில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வது, பாக்டீரியா மற்றும் அசுத்தத்தை நீக்கி வயிறு மற்றும் தொப்புள் பகுதிகளில் எவ்வித வியாதிகளும் ஏற்படாமல் தடுக்கிறது.

சருமத்தைச் சுத்திகரிக்க உதவுகிறது

தொப்புளில் மசாஜ் செய்வது, உங்கள் ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, மாசு மற்றும் கறைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது. குறிப்பாகச் சிகிச்சை எண்ணெய்களான வேப்ப எண்ணெய், ரோஸ்ஷிப் எண்ணெய், தேங்காய் எண்ணெய், எலுமிச்சை எண்ணெய் ஆகியவை உபயோகித்தால் நல்ல ரிசல்டை காணலாம்.

உதடுகளில் வெடிப்பு சரியாகும்

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, தொப்புளில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது உதடுகளில் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

கண்களுக்கு நல்லது

பார்வை சரியாகத் தெரியாத பட்சத்தில், கடுகு எண்ணெய் கொண்டு தொப்புளில் மசாஜ் செய்ய வேண்டும். இது உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வீங்கிய கண்கள், கண்களைச் சுற்றியுள்ள இருண்ட வட்டங்களின் தோற்றத்தைக் குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும்.

இத்தகைய பல்வேறு நன்மைகள் அடங்கிய தொப்புளை குறித்தும், எண்ணெய் தேய்ப்பதைக் குறித்தும் குழந்தைகளுக்கு, சிறு வயதிலிருந்து பெற்றோர் எடுத்துரைக்க வேண்டும்.

Related posts

ஜில்லென்ற சருமம் வேண்டுமா? என்ன செய்யலாம்

nathan

உங்களை வயதானவர்கள் போல காட்டும் கைகளில் உள்ள சுருக்கங்களை எளிதில் மறைய செய்யலாம் தெரியுமா!

nathan

கோடைக்காலத்தில் உடல் முழுவதும் பராமரிக்க டிப்ஸ்

nathan

எண்ணெய் சருமமா? முகப்பருவா? வாரம் இருமுறை ஹெர்பல் ஆவி பிடியுங்கள்!

nathan

உங்கள் துணை கொடுத்த முத்தத்தால் சருமத்தில் தழும்பு விழுந்துவிட்டதா?

nathan

உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்பட்டும் காணப்படுகிறதா?

sangika

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பேபி ஆயிலின் பல்வேறு பயன்பாடுகள்

nathan

வாழைப்பழத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? இதை முயன்று பாருங்கள்!…

sangika

டாட்டூ மோகம் ஓர் எச்சரிக்கை பதிவு

nathan