வேலை, பொருளாதார நிலை, வாழ்வியல், கலாச்சார மாற்றம், ஃபேஷன் என்ற பெயரில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஒருசில வருடங்கள் தம்பதிகள் தள்ளிப் போடுவதுண்டு.
சிலர் தங்களது இளம் வயதை அல்லது திருமணத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தை அனுபவிக்கிறோம் என்ற பெயரிலும் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுகிறார்கள்.
இதில் என்ன இருக்கிறது என நீங்கள் எண்ணலாம், ஆனால், தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வதால் பெண்களுக்கு நாளடைவில் இதய நலன் மோசமடைகிறது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது…
இதய நலன்
30 – 35 வயதுக்கு மேல் குழந்தை குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் பெண்களுக்கு இதய நலன் குறைபாடு, மாரடைப்பு போன்றவை ஏற்படும் அபாயம் இருக்கிறது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
விந்தணுக்கள் யோனிக்கு உள்ளேயும், வெளியேயும் எவ்வளவு நாட்கள் உயிருடன் இருக்கும் தெரியுமா?விந்தணுக்கள் யோனிக்கு உள்ளேயும், வெளியேயும் எவ்வளவு நாட்கள் உயிருடன் இருக்கும் தெரியுமா?
இளம் பெண்கள்
இளம் பெண்கள் அல்லது இளம் வயதில் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் பெண்களோடு ஒப்பிடுகையில் தாமதமாக குழந்தைப் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு அதிகமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்க குழந்தைகளுக்கு இந்த உணவுகள கொடுங்க… அப்புறம் பாருங்க எவ்வளவு புத்திசாலியா வளருவாங்கனு..! உங்க குழந்தைகளுக்கு இந்த உணவுகள கொடுங்க… அப்புறம் பாருங்க எவ்வளவு புத்திசாலியா வளருவாங்கனு..!
ஆரோக்கியமற்றது
பொதுவாகவே, தாமதமாக குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் ஆரோக்கியம் குறைவது, உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவது இயல்பானது.
குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவிடம் இருந்து பாதுகாக்கும் வழிகள் என்ன தெரியுமா?குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவிடம் இருந்து பாதுகாக்கும் வழிகள் என்ன தெரியுமா?
ஆய்வு
ஏறத்தாழ 72,221 பெண்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் 3,306 பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து, தாமதாக குழந்தை பெற்றுக் கொண்ட பெண்கள், அடுத்த 12 வருடத்தில் இதய நலன் குறைபாட்டின் காரணமாக உயிரிழக்கின்றனர் என தெரியவந்துள்ளது.
இதய பரிசோதனை
தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள் சீரான இடைவேளையில் இதய பரிசோதனைகள் செய்துக் கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.