25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
உடல் பயிற்சி

இளமையில் உடற்பயிற்சி முதுகுத்தண்டை வலிமைப்படுத்தும்

உடற்பயிற்சி என்பது வெறும் உடல் எடையைக் குறைக்க மட்டும்தானா என்றால் அதுதான் இல்லை! வாழ்நாள் முழுவதும் உடற்பயிற்சியை நீங்கள் தினசரி பழக்கமாக்கிக் கொள்வதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.

நாற்பது வயதுக்கு பிறகு உங்கள் இதய ரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும் கொழுப்பு, தொடர்ச்சியான உடற்பயிற்சியின் காரணமாக இதயத்தில் படிவதில்லை.

கொழுப்பு படியாத காரணத்தால் உங்களை உயர்ரத்த அழுத்தம் தாக்குவதில்லை. இதனால் உங்களுக்கு இதயநோய், ஹார்ட் அட்டாக், வால்வுப் பிரச்சனை வருவதில்லை. முக்கியமாக உங்கள் தாத்தா, அப்பா ஆகியோர் இதயநோயின் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தால், அவர்கள் விட்டுச்செல்லும் பரிசாக, டி.என்.ஏ வழியாக இடம்பெயரும் பாரம்பரிய தொடர்ச்சியான இதயநோயும் உங்களை தொடர வாய்ப்பே இல்லை!

அடுத்து கொழுப்பு பிரச்சனை இல்லாமல் போவதால் ‘பேட்டி லங்ஸ்’ எனும் தடித்த
நுரையீரல் பிரச்சனையோ, ‘ஆஸ்மேட்டிக் லிவர்’ எனப்படும் மூச்சுப்பிரச்சனையோ இல்லாமல் வாழ்வீர்கள்.

உடலின் முக்கியமான எலும்பு பாகமான மண்டையோடும், ஸ்பைனல் எனப்படும் முதுகெலும்பும் மிக முக்கியமானவை. இதில் ஸ்பைனலை ‘ஸ்பைனல் கார்டு’ என்றே அழைக்கிறோம்.

தரையில் நடத்திசெல்ல அல்லது கால்களால் நடந்து செல்ல பாதுகாவலனாக
இருப்பது ஸ்பைனல் கார்டு. அப்படிப்பட்ட முதுகுத்தண்டில் டிஸ்குகள் தேய்மானம் என்பது தனி மனிதவாழ்க்கையை சவாலாக முடக்கி விடுகிறது. போதிய உடற்பயிற்சி இன்மையால் முதுகுத்தண்டானது, முதுமைக் காரணத்துக்கு முன்பாகவே, தனது செயல்திறனை இழக்க
ஆரம்பிக்கிறது.

மேலும் இடும்பு எழும்பின், பந்து கின்ன மூட்டுக்களும், பாத எழும்புகளும், தோல்பட்டை மூட்டுக்களும், கழுத்து எழும்பும் பாதிக்கப்படுவதற்கு உடற்பயிற்சி இன்மையே காரணம். உடற்பயிற்சி உங்கள் உடலின் முதுகுத் தண்டில் தொடங்கி, முக்கிய எழுப்பு
இணைப்புகளின் செயல்திறனையும், ஆயுள் காலத்தையும் அதிகரிக்க செய்கிறது.

Related posts

உடல் எடையை குறைக்கும் கொள்ளு கஞ்சி

nathan

வயிறு தொடர்பாக பிரச்சனைகளுக்கு

nathan

இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்

nathan

30 மினிட்ஸ் வொர்க் அவுட்ஸ்

nathan

தொப்பையை குறைக்க இலகுவான ரஸ்யன் ருவிஸ்ற் பயிற்சி

nathan

கடற்கரை மணலில் நடைப்பயிற்சி செய்யலாமா?

nathan

இடுப்பு பகுதியை வலுவாக்கும் பார்சுவ கோணாசனம்

nathan

வியர்வை கொட்டும் அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?

nathan

யோகா செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை!

nathan