- சிறிய கத்தி
- கார்விங் கிட்
செய்முற:
கேரட்டின் முன்பகுதியையும், பின்பகுதியையும் வெட்டிவிட்டு பட்டையாக இருக்கும் நடுப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
கார்விங் கிட்டிலுள்ள கூர்மையான கம்பி முனையுள்ள டூலைக் கொண்டு கேரட்டில் இலை வடிவத்தை வரையவும்.
வரைந்த அடையாளங்கள் தெளிவாக தெரிவதற்கு அதே டூலைக் கொண்டு வரைந்த பகுதியை இன்னும் ஆழமாக வரைந்துவிடவும்.
பிறகு கத்தியை கொண்டு வரைந்த பகுதியை மட்டும் விட்டுவிட்டு மீதியை வெட்டி நீக்கிவிடவும்.
வெட்டி எடுத்த பிறகு இவ்வாறு இருக்கும்.
அதன் நடுவில் படத்தில் காட்டியுள்ளது போல் மெல்லியதாக ஆழமான கோடுகள் வரையவும்.
கார்விங் கிட்டிலுள்ள டூல்ஸில் ஒரு பக்கம் வளைவாகவும், மற்றொரு பக்கம் ‘V’ வடிவிலும் இருக்கும் டூலை எடுத்து ‘V’ வடிவ முனையைக் கொண்டு, இலையின் வலது மற்றும் இடது புற ஓரங்களிலிருக்கும் கூர்முனையான பகுதியில் வைத்து அழுத்தி சற்று உள்நோக்கி பெயர்த்து எடுக்கவும்.
கேரட்டில் செய்த இலை தயார்.