29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
pregnant
மருத்துவ குறிப்பு

மனித பிறப்பில் கருக்குழாயின் பங்களிப்பு

டாக்டர். கே.எஸ். ஜெயராணி அவர்கள் ஒரு இணையத்தில் எழுதிய கட்டுரை
தாம்பத்ய உறவில் கணவனிடம் இருந்து வெளியாகும் விந்து, பெண் உறுப்புக்குள் வருகிறது. அதில் இருக்கும் உயிர ணு மட்டும் நீச் சல் அடித்து கர்ப ப்பை வாய் வழி யாக கருக் குழாய் க்குள் நுழைகிற து. சினைப்பையில் இருந்து முதிர்ந்து வெடித்து வெளியே றும் சினைமுட்டையும் கருக்குழாய்க்கு வருகிறது. 4, 5 மணி நேரத்தில் உயிரணு, சினை முட்டையை துளைத்து உள் ளே புகுந்து கருவாகி விடுகிறது. மனிதப் பிறப்பின் இந்த அற்புத நிகழ்வு கருக் குழாயில் தான் அரங் கேறு கிறது. 4, 5 நாட்கள் கருக்குழா யிலே கரு வளர்ந்து சிறிது சிறி தாக கர்ப்பப்பையை நோக்கி நக ர்ந்து வரும். கர்ப்பப் பை தேவை யான மாற்றங்களோடு கருவை உள்வாங்கிக் கொள்ளும். பின்பு கர்ப்பப்பைக்குள் கரு, சிசுவாக வளர்ந்து குழந்தையாக உருவா கும். கருக்குழாய்கள் மற்றும் அதனைச் சார்ந்த நவீன மருத்துவ முறைகளைப் பார்ப் போம்.

கருக்குழாய்கள்:

– இவை பிறப்பில் பெரும் பங்கு வகிக்கும் இனப்பெரு க்க உறு ப்புகள்.

– கருக்குழாய்கள் சினைப் பை யில் தொடங்கி, கர்ப் பப்பையில் நிறைவடை கிறது.

– உற்றுக்கவனித்தால், ஒரு மனிதன் இருகைகளையும் நீட்டி சினைப்பைகளை தாங்கிப் பிடித்தது போல், இந்த கருக் குழாய் கட்டமைப்பு தோன்றும். தலா 10 செ.மீ. நீளம் கொண் டவை. நூலிழை போல் ஒன்று முதல் 4 மி.மீட்டர் அகலம் கொண்டவை.

நீங்கள் சோதனைக்குழாய் குழ ந்தை முறையைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். முத ல் சோதனைக்குழாய் குழந் தை லூயிஸ் பிரவுன் இங்கி லாந்தில் பிறந்தது.

பெண்ணின் உடலுக்குள் கரு க்குழாய் இயற்கையாக செய் யும் அதே பணியைத்தான், வெளியே ஆய்வு கூடத்தில் சோதனைக் குழாய் மூலம் செய்கிறார்கள். சினை முட் டையையும், உயிரணுவையும் சோதனைக் குழாயில் சேர் த்து கருவாக்கம் செய்து, பின்பு தாயின் கர்ப்பப்பைக்குள் செலுத்துகிறார்கள். இப்போது உங் களுக்கே புரிந்திருக்கும். கருக்குழா யில் பாதிப்பு கொண்ட பெண்களுக் காக சோத னைக் குழாய் முறை உருவாகி இருக்கிறதென்று!

கருக்குழாய்கள் மிகமிகச் சிறிய தாகவும்-மிகமிக மென்மை யான தாகவும் இருப்பதால் இது பாதிக் கப்படும் வாய்ப்பு அதிகம். தற் போதைய கணக்குப்படி பெண்க ளின் குழந்தையி ன்மைக்கு 20 முதல் 25 சதவீதம் கருக்குழாய் பாதிப்புதான் காரணமாக இருக்கி றது.

* திருமணத்திற்கு முன்பு பெண்கள் ஏற்படுத்திக்கொள்ளும் உடலுறவு மற்றும் அதன் பின் விளைவுகளால் ஏற்படும் நெருக்கடிகள்.

* அதிகமானவர்களுடன் உற வு வைத்துக்கொள்ளும்போ து ஏற்படும் பால்வினை நோய் பாதிப்பு! பால்வினை நோய்க ளில் ‘கிளாமைடியா’ என்பது வைரஸ் போன்ற பாதிப்பை ஏற்படுத்துவதா கும். இது எந்தவித நோய் அறிகுறியையும் வெளிப்ப டுத்தாமல் உள்ளே இருந்து கருக்குழாய்களை பாதிக்கச் செய்துவிடும்.

* காச நோயின் அதிக தாக்குதலும் கருக்குழாய்களை பாதிக் கலாம்.
images?q=tbn:ANd9GcRFmxtM1RbuQzpU hRlG6R7zlJPT9A3nWqD 9sihhQ2QFUA4wmG
* அறுவை சிகிச்சையால் ஏற்படும் பாதிப்பாலும், பிறவியிலே ஏற்படும் கு றைபாட்டாலும் கருக் குழாயில் சிக்கல்கள் ஏற்ப டுவதுண்டு.

கருக்குழாய்களில் ஏற்படு ம் அடைப்பை கண்டுபிடி க்க நவீன மருத்துவ வழி முறைகள் உள்ளன. குறி ப்பிட்ட திரவத்தை கர்ப்பப்பை வாய் பகுதியில் ஊசி மூலம் செலுத்த வேண்டும். அந்த திரவம் செலுத்தப்படும்போது அது கருக்குழாய் களுக்குள் முன் னேறி செல்லும். அப்போது எங்கு தடை ஏற்படுகிறது? எந் த அளவுக்கு அந்த தடை உள் ளது? என்பதை எல்லாம் கண் டுபிடித்து விடலாம். லேப் ராஸ் கோபி முறையில் கண் களுக்குத் துல்லியமாகத் தெரியும் நீலநிற திரவத்தை செலுத் தலாம். அந்த திரவம் செல்வதை கேமிராவில் பார்க்கலாம்.
images?q=tbn:ANd9GcT9PN9oaDcyVF2k aPqS5k1lVQtKq6FfBUbUUXtOgGhTNmpz4oueg
இதன் மூலம் வலது-இடது எந்த பக்க கருக்குழாயில் அடைப்பு ஏற் பட்டிருக்கிறது என்பதை கண்ட றிந்து சிகிச்சை செய்ய லாம். அழுத்தம் கொடுத்து திரவத்தை செலுத்தும்போதே சிலருக்கு அடைப்பு நீங்கி, பாதை சரியாகி விடும். அதனால் அவர்கள் விரை வாகவே தாய்மை அடை யும் வாய்ப்பு ஏற்ப டும். நுண் குழாயை உள்ளே செலுத்தி அ டைப்பை நீக்கும் முறையும் ஓர ளவு பலன்தரும். இந்த முறை களில் பலன் கிடைக்காதபோது சோதனைக்குழாய் குழந்தை முறை பரிந் துரைக்கப்படும்.

கருக்குழாயில் அடைப்பு இருந்தால் அதிலே கரு தங்கி வளர் வது உயிருக்கே ஆபத்தான தாகும். கருக்குழாயில் வள ரும் கருவானது 5-வது நாள் கர்ப்பப்பைக்குள் வந்துவிட வேண்டும். அடைப்பு இருந் தால், கர்ப்பப்பைக்குள் செல் ல முடியாமல் கருக்குழாயி லே தங்கி கரு வளரத் தொட ங்கிவிடும். அது வளரும் போது கருக்குழாய் வெடி த்து, தாயின் உயிருக்கு ஆபத்தாகிவிடும். இப்படி கரு வளர் வதை ‘எக்டோபிக் பிரக்னன்சி’ என்பார்கள். முன்பெல்லாம் இத்தகைய புற கர்ப்பம் (எக்டோபிக் பிரக்னன்சி) பாதிப்பால் ஏராளமான பெண்கள் இறந்திருக்கி றார்கள். தற்போது அதை கண்டு பிடித்து, அந்த கரு க்குழாயை அகற்றி, கரு வை நீக்கம் செய்து விடு வார்கள். மீதமிருக்கும் இன்னொரு குழாய் மூல ம் அடுத்து தாய்மை அ டைய முடியும்.

தேவைக்கு குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் மீண்டும் தாய்மை அடைவதை தவிர்க்க கருத்தடை ஆபரேஷன் செய் து கொள்வார்கள். அப்போது கருக்குழாயை துண்டித்து முடி ச்சு போடப்படும். இது ‘டியூபெக்டமி’ கருத்தடை ஆபரே ஷன் ஆகும். இந்த கருத்தடை ஆபரேஷனை செ ய்து கொண்டவர்கள் மீண்டும் குழந் தை பெற்றுக்கொள்ள விரும்பி னால், ‘ரீ கேனலைஷேசன்’ செய்து மீண்டும் கருக்குழாய்களை ஆபரே ஷன் மூலம் இணைப்பார்கள். அதன் பின்பு தாய்மை அடைய வாய்ப்பு உண்டு!
images?q=tbn:ANd9GcTPudKnJzhJr7PenJN0RP5JRaRIw3bSA6 h9tMeqsau1iUuB18b
மனித பிறப்பில் கருக்குழாயின் பங்களிப்பு எவ்வளவு இன்றி யமையாததாக இருக்கிறது, பார்த்தீர்களா!

Related posts

யார் ரத்த தானம் செய்யலாம்?

nathan

சளித்தொல்லைக்கு மருந்தாகும் தும்பைப்பூ!

nathan

ரத்த குழாய் அடைப்பு நீங்க.! இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

nathan

தூதுவளையை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்திவர கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்…

sangika

உங்க உடலில் வைட்டமின் சி குறைவதால் என்ன நேரும் தெரியுமா?

nathan

குழந்தை எடை குறைவாக பிறக்க இதெல்லாம் ஒரு காரணமா?…

nathan

நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

குழந்தைகள் சேமிக்க பணம் கொடுக்கலாம்

nathan

சிறுநீரகக் கல்லையும் ஒரே வாரத்தில் கரைக்கும் நார்த்தம்பழம்

nathan