25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
p32a
சரும பராமரிப்பு

”சருமத்தை மெருகேற்ற பார்லரைவிட கூடுதல் பலன் கொடுக்கக்கூடியது, அரோமா ஆயில்!”

எங்கு கிடைக்கும்?

அரோமா ஆயில் என்பது நறுமண எண்ணெய்களைக் குறிக்கும். இது வாசம்மிக்க மலர்கள் மற்றும் தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இது, மெடிக்கல் ஷாப், நாட்டு மருந்துக் கடை மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்.

”சருமத்தை மெருகேற்ற பார்லரைவிட கூடுதல் பலன் கொடுக்கக்கூடியது, அரோமா ஆயில்!”

– அழுத்தமாகச் சொல்கிறார், சென்னை, ‘கேர் அண்ட் க்யூர்’ அரோமா கிளினிக்கின் நிர்வாகி கீதா அஷோக். அரோமா ஆயில் உதவியுடன் வீட்டிலேயே தேக வனப்பை மீட்கும் எளிய வழிகள் இதோ!

க்ளென்சிங் கவர்ச்சி!

தினமும் முகத்தைக் கழுவும்போது, சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் சிறிதளவு எடுத்து நுரை வரும் அளவுக்கு கைகளில் தேய்த்துக்கொண்டதும் அந்த நுரையில் லெமன் கிராஸ் ஆயில் இரண்டு சொட்டு விட்டு முகத்தைக் கழுவவும்.

பலன்: சரும துவாரங்களில் அடைந்துள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன், அரோமா ஆயிலின் வாசனையானது, சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும்.
p32a
நீராவி பியூட்டி!

எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்களுக்கான குறிப்பு இது. ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் பெப்பர் மின்ட் ஆயில், லாவெண்டர் ஆயில், மின்ட் ஆயில் தலா இரண்டு சொட்டுகள் விட்டு பாத்திரத்தை மூடி அடுப்பில் ஏற்றி கொதிக்கவிடவும். இதில் முகத்துக்கு நீராவி எடுக்கவும்.

பலன்: முகத்தில் சுரக்கும் அதிக எண்ணெய்ப் பசையை மட்டுப்படுத்துவதுடன், சருமத்தில் படிந்துள்ள அழுக்கை வெளியேற்றி பொலிவாக்கும்.

வறண்ட சருமத்தினருக்கும் இருக்கிறது அழகுக் குறிப்பு. ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து அதில் ஜெரேனியம் ஆயில் (geranium oil), லாவெண்டர் ஆயில், யலாங் யலாங் ஆயில் (ylang ylang oil) தலா இரண்டு சொட்டுகள் விட்டு, மூடிக் கொதிக்க விடவும். கொதித்த பின் நீராவி பிடிக்கவும்.

பலன்: முகத்தின் இறந்த செல்களை நீக்குவதுடன், சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்க உதவும்.

சரும அடுக்குகளில் ஊடுருவும் ஆயில்!

பொதுவாக பொலிவிழந்த சருமத்தை உடனடியாகப் பளிச்சென காட்டவும், அந்தப் பொலிவு அதிகபட்சம் மூன்று நாட்கள் நிலைக்கவும் ஃபேஸ்பேக் உதவி செய்யும். ஆனால் கரும்புள்ளி, பரு, மங்கு போன்ற சருமத்தின் இரண்டாவது அடுக்கின் பிரச்னைகளையும், சுருக்கம், கோடுகள், வயதான தோற்றம், சருமத் தளர்வு போன்ற சருமத்தின் மூன்றாவது அடுக்கின் பிரச்னைகளையும் சரிசெய்வது, அரோமா ஆயிலின் தனிச்சிறப்பு. இதற்கு, லாவெண்டர் ஆயில், லைம் ஆயில், பச்சோலி ஆயில், சீடர் வுட் ஆயில், யலாங் யலாங் ஆயில் இவற்றில் ஏதாவது இரண்டு ஆயில்களில் தலா இரண்டு சொட்டுகளை, ஃபேஸ்பேக் போடும் முன் அதில் கலந்து முகத்துக்கு அப்ளை செய்யவும்.
p32c
பலன்: அரோமா ஆயிலின் மூலக்கூறுகள் சருமத்தின் துவாரங்களைவிட மிகச்சிறியது. அதனால் ஃபேஸ்பேக் போட்ட 2 முதல் 20 விநாடிகளுக்குள் இந்த ஆயில் சருமத்தின் மூன்றாவது அடுக்குவரை ஊடுருவி சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும்.

மொத்தத்தில், அரோமா ஆயில்கள் இனி இருக்கட்டும். உங்கள் அலமாரியில்!

Related posts

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…அழகாகவும் அட்டகாசமாகவும் இருக்க ‘இத’ செஞ்சா போதுமாம்…!

nathan

நிமிடத்தில் முகம் ஜொலிக்க வேண்டுமா? இந்த ட்ரிக்கை உபயோகிங்க!

nathan

முகத்தில் உள்ள அதிக எண்ணெயைப் போக்கி, அடைப்பட்ட துளைகளைத் திறந்து சருமத்தை பளிச்சிட உருளைக்கிழங்கு பேஸ்பேக்…!!

nathan

இந்த அழகு பொருட்கள்தான் உங்கள் சருமத்தை மோசமடையச் செய்யும். கவனமாக இருங்கள்!

nathan

இந்த’ மலர்களின் நீரை யூஸ் பண்ணா..அழகான சருமம் கிடைக்குமாம் தெரியுமா?

nathan

மென்மையான சருமத்திற்கு

nathan

வயதானாலும்… இளமையை தக்க வைக்கும் டிப்ஸ்..தெரிந்துகொள்வோமா?

nathan

அழகு

nathan

கழுத்தின் கருமையைப் போக்க..

nathan