26 C
Chennai
Wednesday, Nov 13, 2024
325b038f dfda 4904 9840 873bbd56d630 S secvpf
ஐஸ்க்ரீம் வகைகள்

சுவையான மாம்பழ பிர்னி

தேவையான விஷயங்கள்:

 

நன்கு கனிந்த புளிப்பில்லாத மாம்பழம் – 2

அரிசி – 2 டே.ஸ்பூன்,

கெட்டியான பால் – 3 கப்,

சர்க்கரை – சுவைக்கு

ஏலப்பொடி சிறிதளவு,

சன்னமாக சீவிய பாதாம், பிஸ்தா, சாரைப்பருப்பு அலங்கரிக்க

 

செய்முறை:

 

மாம்பழங்களை தோல்சீவி உரிக்கவும், சன்னமாக நறுக்கி வைக்கவும்.

 

அரிசியை 30 நிமிடங்கள் ஊறவைத்து மை போல அரைக்கவும்.

 

ஒரு கனமான வாணலியில் பால் ஊற்றி ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள்.

 

அதில் அரைத்து வைத்துள்ள அரிசி விழுதைச் சேர்த்து கட்டியில்லாமல் கலந்துவிடவும். விழுது நன்கு வெந்து பளப்பளப்பான நிறம் வந்ததும் தேன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

 

தேன் நன்றாக சேர்ந்து கொதிக்கத் தொடங்கியதும் இறக்கி சிறிது ஆறியதும், நறுக்கி வைத்துள்ள மாம்பழங்களை அலங்கரிக்கப்பதற்கு சிறிதளவு தனியாக வைத்துக்கொண்டு, மீதமுள்ளதை லேசாகப் பிசைந்து கூழ்போல் செய்து இறக்கி வைத்துள்ள பாலோடு கலந்து விட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்.

 

• 2 நிமிடம் கழித்து நறுக்கிய மாம்பழம், பருப்புகளைத் தூவி அலங்கரிக்கவும்.

 

• குளிர்சாதனப் பெட்டியில் 1/2 மணி நேரம் வைத்திருந்து சில்லென்று பரிமாறவும். குளிர்ச்சி விரும்பாதவர்கள் அப்படியே அருந்தினாலும் நன்றாக இருக்கும்.

Related posts

வெண்ணிலா ஐஸ் கிரீம் வித் ஜெல்லி

nathan

பிரெட் ஐஸ்கிரீம்

nathan

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம்

nathan

ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்

nathan

ஃபிரைடு ஐஸ்கிரீம்

nathan

சாக்லெட் புடிங்

nathan

குல்பி

nathan

பைனாபிள் – செர்ரி ஜஸ்க்ரீம்

nathan

மால்ட் புட்டிங்

nathan