32.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
Chicken Cauliflower Gravy29 jpg 926
சைவம்

சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!

இந்த கறி சமைக்கும் போதே அதின் வாசமும் மணமும் நம்மை சாப்பிட இழுத்துக் கொண்டு வந்துவிடும். இது சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம், பூரி கூட சாப்பிட மிகுந்த சுவையாகயிருக்கும் சாதத்துல போட்டும் சாப்பிடலாம். இதில் காலிஃபிளவர் சேர்த்திருப்பதால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.. செய்து சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள்.. ஆஹா பிரமாதம்னு!

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ
காலிஃப்ளவர் – 1 கப்
இஞ்சிபூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
பட்டை லவங்கம் – சிறிதளவு
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 3 அல்லது 4
மிளகாய்தூள் – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

மசாலாவிற்குத் தேவையானவை:

கடலைப்பருப்பு – 3 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் – 6
மிளகு – 2 ஸ்பூன்
பட்டை – சிறிதளவு
சீரகம், சோம்பு – 2 ஸ்பூன்
தேங்காய் துருவியது – 1 கப்

செய்முறை:

* சிக்கனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து திட்டமான பீஸாக்கிக் கொள்ளவும்.

* உப்பும், மிளகாய்த் தூளும் இட்டு சிக்கனை 10 நிமிடம் பிரட்டி வைக்கவும்.

* தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் நீளவாக்கில் அரிந்துக் கொள்ளவும்.

* மசாலாக்களுக்குத் தேவையானவைகளை சட்டியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் இவைகளைப் போட்டு வறுக்கவும்.

* கடைசியாக தேங்காய்பூவையும் போட்டு வறுத்து சற்று ஆறவிட்டு அதை மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைக்கவும்.

* சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு அது சூடானதும், பட்டை, லவங்கம் போட்டு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் அனைத்தையும் போட்டு பின்பு, காலிஃபிளவரை சேர்த்து லேசாகக் கிளறிவிடவும்.

* அது வதங்கியதும் பின்பு அதோடு இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அதுவும் சற்று மசங்கியதும், அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.

* அது எல்லாம் சேர்வதுபோல் கிளறிவிட்டு மிதமான தீயில் வைத்து வைத்து மூடவும். மசாலா வாசம் போய் நல்ல வாசம் வந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லியை போட்டு இறக்கவும்.
Chicken Cauliflower Gravy29 jpg 926

Related posts

காலிபிளவர் மிளகு வறுவல்

nathan

கப்பக்கறி

nathan

தட்டைப்பயறு கிரேவி

nathan

எள்ளு சாதம்

nathan

கீரையை எப்படிப் பார்த்து வாங்குவது?

nathan

ருசியான சாமை சாம்பார் சாதம்

nathan

செட்டிநாடு பக்கோடா குழம்பு

nathan

வாங்கிபாத்

nathan

சம்பா கோதுமை புலாவ்

nathan