26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
21 1445407185 7 tamarind4
சரும பராமரிப்பு

புளியைக் கொண்டும் சரும நிறத்தை அதிகரிக்கலாம் என்பது தெரியுமா?

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் புளியும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதனால் தான் அன்றாடம் நாம் சமைக்கும் சமையலில் புளியையும் சேர்க்கிறோம். புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய புளி சருமம் மற்றும் முடிக்கும் நல்லது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம், புளி சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இதற்கு புளியில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் காரணம். உங்களுக்கு புளியைக் கொண்டு எப்படி சருமம் மற்றும் தலைமுடியினைப் பராமரிப்பது என்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

பொலிவான சருமத்திற்கு…

புளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரித்திருப்பதை நீங்கள் காணலாம்.

செல்லுலைட்டிற்கு…

உங்களின் தொடையில் உள்ள செல்லுலைட்டை நீக்க பல முயற்சிகளை மேற்கொண்டும், எந்த ஒரு பலனும் இல்லையா? அப்படியெனில் சிறிது புளிச்சாற்றில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, அதில் சிறிது பேக்கிங் சோடா தூவி, பிரஷ் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் செல்லுலைட் மறையும்.

இறந்த செல்களை நீக்க…

புளியில் ஆல்பா-ஹைட்ராக்ஸில்-ஆசிட் உள்ளது. இது சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளையெல்லாம் நீக்கும். எனவே புளிச்சாற்றில் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையகா மசாஜ் செய்து, 2 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீக்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாக இருக்கும்.

ப்ளீச்

புளிச்சாற்றில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகச்சருமத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

முடி உதிர்தலுக்கு…

உங்களுக்கு முடி அதிகம் உதிர்கிறத? அப்படியெனில் முடியின் மயிர்கால்களை வலிமையாக்க புளிச்சாற்றினைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, சுடுநீரில் நனைத்து பிழிந்த துணியை தலையில் 15 நிமிடம் கட்டி, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

கழுத்தில் உள்ள கருமையை நீக்க…

பலருக்கும் கழுத்தைச் சுற்றி கருமையான படலம் ஒன்று இருக்கும். இதனை நீக்க புளிச்சாற்றில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் 3-4 முறை செய்து வந்தால், கருமையை விரைவில் போக்கலாம்.

சரும சுருக்கம்

புளியில் வைட்டமின்கள், நார்ச்சத்து, அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளது. இவை சருமத்திற்கு ஊட்டம் அளித்து, முதுமைத் தோற்றம் வருவதைத் தடுக்கும். அதற்கு புளிச்சாற்றில் தேன் மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும்.

21 1445407185 7 tamarind4

Related posts

பனிக்காலத்தில் சருமத்தைப் பொலிவாக்க சில டிப்ஸ்!

nathan

சருமம் பளபளக்க பாதாம் எண்ணெயை பயன்படுத்தும் 10 வழிகள்!!சூப்பர் டிப்ஸ்

nathan

முகத்தில் ஏற்பட கூடிய எல்லா வித பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வை தர!….

sangika

சருமத்தில் உள்ள நீங்கா கருமையை எளிதில் போக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

nathan

எண்ணெய் பசை சருமம் உஷார்!

nathan

குளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வழிகள்

nathan

சரும சுருக்கத்தை போக்கும் டைட்னிங் பேஷியல்

nathan

சருமத்தின் வயதினை கட்டுப்படுத்தி சிவப்பழகு பெற

nathan

கோடைக்காலத்தில் ஏற்படும் அரிப்பு பிரச்சனையை சமாளிக்க வழிகள்

nathan