lice head itching
தலைமுடி சிகிச்சை

பேன், தலை அரிப்பை போக்கும் வேப்பிலை வைத்தியம்! அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

தாங்க முடியாத தலை அரிப்பால் அடிக்கடி தலைக்குள் கைவிட்டு `கிடார்’ வாசிப்பவர்களுக்கும், கூந்தல் பிசுபிசுப்பால் தலையில், `குப்’பென்று அடிக்கிற வியர்வை துர்நாற்றத்தால் நொந்து போகிறவர்களுக்கு `தலை மேல் பலன்’ கொடுக்கிற பேக் இது…

 

வேப்பிலை தூள்- அரை டீஸ்பூன்,

கடுக்காய்த்தூள்- அரை டீஸ்பூன்,

வெந்தயத்தூள் – 2 டீஸ்பூன்,

பயத்தமாவு-2 டீஸ்பூன்,

எலுமிச்சைச்சாறு – 1டீஸ்பூன்…

 

 

இவற்றுடன் வெந்நீரை கலந்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். தலைக்கு `பேக்’ போட்டு, பத்து நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த `பேக்’ போட்டுப் பாருங்கள். பிசுபிசுப்பு, வியர்வை துர்நாற்றத்திலிருந்து நிரந்தரமாக விடுதலையாகி விடுவீர்கள். சீயக்காயுடன் வேப்பம்பட்டையை உலர்த்தி அரைத்தும் பயன்படுத்தலாம். தலை அரிப்பு ஓடியே போய்விடும்.

 

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த பேன் தொல்லைக்கு ஒரேயடியாக முடிவு கட்டுகிறது. இந்த ட்ரீட்மெண்ட்…

 

வேப்பிலை-1 பிடி,

சீயக்காய்-5,

தோல் நீக்கிய கடுக்காய்-1,

கொட்டை எடுத்த புங்கங்கொட்டை-3,

செம்பருத்தி இலை-1 பிடி…

 

இவற்றை இரவே தண்ணீரில் ஊறவிடுங்கள். காலையில் அரைத்து அந்த விழுதை தலையில் தேய்த்துக் குளியுங்கள். இந்த வாசனைக்கே பேன் தப்பித்து ஓடுவதுடன், உங்கள் தலை பக்கம் இனிமேல் எட்டிப் பார்க்கக்கூடப் பயப்படும்.

Related posts

வழுக்கைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில எளிய இயற்கை வழிகள்!

nathan

கூந்தல் ரொம்ப உதிர்கிறதா? கவலைய விடுங்க

nathan

ஆயுர்வேதத்தில் பொடுகுத் தொல்லையில் முழுமையாக விடுதலைத் தரும்…

sangika

வம்சமும், தலை முடியும்

nathan

உங்களுக்கு முடி அதிகம் கொட்டுதா?

nathan

பொடுகுக்கு முற்றுப்புள்ளி!

nathan

மழைக்காலத்தில் உங்க முடி கொட்டாமல் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர

nathan

முடிகளில் வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டுமா? அப்ப வாரம் ஒருமுறை இத போடுங்க…

nathan

பாசிப்பயிறு அரைத்து தலைமுடியில் தேய்த்துக் குளிப்பது தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்து.

nathan