25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

இலகுவான அப்பம்

images (10)தேவையான பொருட்கள்..

வெள்ளை அரிசிமா…( வறுக்காதது)…..2 கப்.
மைதா மா………………………………….1/2 கப்.
தேங்காய் பால் டின்……………………….1
தயிர்………………………………………….2 மே.கரண்டி.
சீனி……………………………………………1 மே.கரண்டி.
கெட்டிப்பால்.( தேங்காய்ப்பால்)………….1 கப்.
முட்டை………………………………………1
ஈஸ்ட்…..அல்லது பேக்கிங் பவுடர்…….1/4 தே.கரண்டி.
உப்பு…………………………………………..(அளவாக)

செய்முறை…

அரிசிமாவுடன், மைதா மா, முட்டை, தயிர், சிறிதளவு தேங்காய்ப்பால் , ஈஸ்ட், எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து கட்டியில்லாதவாறு கெட்டியாக கரைத்து வைக்க வேண்டும். அதிகம் கெட்டியாக இல்லாவிட்டாலும் கவலைப்படத்தேவையில்லை.

அக்கலவை 3 மணி நேரம் வைத்துவிட்டு பின்னர் அதனுள் சீனி,உப்பு சேர்த்து மிகுதியாகவுள்ள தேங்காய்ப்பாலில் தோசை மா பதத்திற்கு கரைத்து எடுக்கவும்.

அடுப்பில் அப்பச்சட்டியை சூடேற்றிக் கொள்ளவேண்டும்.

ஒரு துப்பரவான துணியில் கொஞ்சம் எண்ணெய் தொட்டு அப்பச்சட்டியில் சுற்றவர பூசிக்கொள்ள வேண்டும்.

(முக்கியம்)(எண்ணெய் அதிகம் வழிந்தோடும் நிலையில் இருக்கக்கூடாது)

அதன் பின்னர் ஒரு அளவான கரண்டியால் அப்ப மா கலவை ஊற்றி அப்பம் சுற்றுவது போல சுற்றி வைத்து விட்டு கெட்டிப்பாலில் கொஞ்சம் இட்டு மூடி விடவேண்டும்.

பின்னர் அப்பம் வெந்து வடிவாக வரும்…

முட்டையப்பம் விரும்பின் பாலுக்குப் பதிலாக முட்டையுடன், உப்பு, மிளகு தூள் போட்டு நன்றாக வேகவிட்டு எடுக்கலாம்..(படத்தில் காட்டியவாறு)

ஆரம்பத்தில் மா கலவையினுள் முட்டை போட விரும்பாதவர்கள் போடத்தேவையில்லை. முட்டை 1 போடுவதால் ஒரு பிரச்சனையும் இல்லாமல், சட்டியில் ஒட்டிப்பிடித்து அடம்பிடிக்காமல் சொல் வழிகேட்டது போல அம்சமா வரும்.

Related posts

தேன்குழல் – ஜாங்கிரி

nathan

மொறு மொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ்

nathan

நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan

சூப்பரான இறால் பஜ்ஜி முயன்று பாருங்கள்…

sangika

சுவையான பிரெட் - அவல் சப்பாத்தி

nathan

குழந்தைகளுக்கு சத்தான பொட்டுக்கடலை லட்டு

nathan

குழந்தைகளுக்கு சத்தான பிரெட் ஃப்ரூட் ரோல்

nathan

முட்டை மசாலா சமையல் குறிப்புகள்

nathan

முட்டை பிட்சா

nathan