28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
03 1509688703 15
முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! கரும்புள்ளிகளைப்போக்கி முகத்தை பொலிவாக்க‍ சில குறிப்புகள்

உங்கள் முகத்தில் விழுந்துள்ள‍ கரும் புள்ளிக ளால் உங்கள் முகம், பொலிவிழந்து கருத்து காணப்படுகிறதா? கவலையை விடுங்கள். கீழு ள்ள‍ குறிப்புக்களை பின்பற்றி, அதன்மூலம் இழ ந்த உங்கள் முகப்பொலிவினை மீண்டும் பெற் று , இந்த உலகிலேயே நீங்கள் தான் அழகு ராணி என்பதை நீங்கள் உணர்வது நிச்ச‍ யம்

முட்டை:

முட்டையை உடைத்து ஒரு பௌலில் ஊற்றி, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கரும் புள்ளிகள் மறைந்துவிடும்.

பப்பாளி:

பப்பாளியும் கரும்புள்ளியைப் போக்கும் பொருட் களில் சிறந்தது. எனவே நன்கு கனிந்த பப்பாளி யை மசித்து, அதில் பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து அலச வே ண்டும்.

கடலை மாவு:

கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து, வேண்டுமெனில் அத்துடன் சிறிது தேனையும் சேர்த்து, முகத்திற்கு மாஸ்க் போட் டால், இயற்கையாகவே கரும்புள்ளிகள் போய்விடும்.

கற்றாழை:

கற்றாழையின் ஜெல்லை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி மசாஜ் செய்து கழுவி னால், நாளடைவில் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்கலாம்.

வேப்பிலை:

வேப்பிலையை நீரில்போட்டு கொதிக்கவைத்து, அந்த நீரில் ஆவிப்பிடித்து, முகத்தை நல்ல சுத்த மான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் போய்விடும்.

சந்தனம்:

சந்தனப்பொடியில், சிறிது மஞ்சள் தூளை சே ர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

பட்டை:

பட்டையை பொடி செய்து, அதில் தேன் ஊற்றி கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுக் கும்போது தடவி, காலையில் எழுந்து கழுவி னாலும் நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம்:

பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரை த்து, முகத்தில் தடவி கையால் மென்மை யாக மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் பாலை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய் து, வெது வெதுப்பான நீரில் அலச வேண்டும்.

டூத் பேஸ்ட்:

கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் டூத்பேஸ்ட் தடவி காய வைத்து, பின் மென் மையாக மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஆவி பிடித்து, காட்டினால் தேய்த்து எடுத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, சருமத் துளைகளும் மூடிக் கொள்ளும்.

ஆலிவ் ஆயில்:

5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ்செய்து, பின் ஆவிப்பிடித்து, ஈரமான துணியால் தேய் த்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்கி விடும்.

Related posts

பளிச் தோற்றத்திற்கு மாம்பழக் கூழ் பேஷியல்

nathan

சூரிய ஒளியால் பொலிவிழந்து விட்ட முகத்திற்கு இதை செய்யுங்கள்!…

nathan

ஹெர்பல் ஃபேஷியல்

nathan

இளமையூட்டும் கடலை மா

nathan

உங்களுக்கு தெரியுமா உடலில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற இப்படியொரு வழியா!

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டிலேயே தலை முதல் கால் வரையிலான அழகை மெருகேற்றலாமே

nathan

தேன் ஃபேஸ் வாஷ் ட்ரை பண்ணியிருக்கீங்களா? வீட்டிலேயே தயாரிக்கலாம்

nathan

உங்கள் சருமத்தில் உண்டாகிற இறந்த செல்களை நீக்கி பளிச்சிட செய்ய இதை செய்யுங்கள்.

sangika

முகத்தைப் பொலிவாக்கும் கடலை மாவு பேஷியல்

nathan