25.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
020e95ef 03ec 4175 a3bf 8cfef8d6ac85 S secvpf
சிற்றுண்டி வகைகள்

முட்டை இட்லி உப்புமா

தேவையான பொருட்கள்:

இட்லி – 4
முட்டை – 2
மிளகுப் பொடி – அரை ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு.

செய்முறை :

• வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• இட்லியை நன்றாக உதிர்த்து வைத்து கொள்ளவும்.

• ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.

• முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வதக்கிய வெங்காயத்தில் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து முட்டை வேகும் வரை நன்கு கிளறவும்.

• முட்டை வெந்தவுடன் உதிர்த்த இட்லியை சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நன்கு பிரட்டி விட்டு நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

• சுவையான முட்டை இட்லி உப்புமா ரெடி. காலையில் மீதியான இட்லியை குழந்தைகளுக்கு இப்படி மாலையில் செய்து கொடுக்கலாம்.
020e95ef 03ec 4175 a3bf 8cfef8d6ac85 S secvpf

Related posts

குனே

nathan

வெஜிடபிள் பாட் பை

nathan

பச்சரிசி பால் பொங்கல்

nathan

ராகி பால் கொழுக்கட்டை

nathan

பழநி பஞ்சாமிர்தம்

nathan

சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்

nathan

ஈஸியான ரவா பொங்கல் செய்ய…

nathan

சுவையான மைசூர் போண்டா….

sangika

உப்புமா பெசரட்டு

nathan