24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
5 2114
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…பெண்களை தாக்கும் மூட்டு வலி: தவிர்க்க வழிகள்

 

வயது முதிர்வு அடைந்தவர்களுக்கு பெரும் வேதனையாக இருப்பது மூட்டு வலி. இன்றைய இளம் தலைமுறையினரும் மூட்டுவலியால் அவதிப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களை இந்த மூட்டு அதிகம் தாக்குகிறது. மாதவிடாய் நின்ற பிறகு உடலில் உள்ள கால்சியம் குறைவதால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் ஏற்படும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணம் உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே ஆகும். நாளடைவில் இதுவே பெரிய நோயாக மாறும். இந்த மூட்டு வலியை நீக்க நமது அன்றாட உணவு முறைகளே போதுமானது.

இயற்கையான சத்து நிறைந்த பொருட்களை சாப்பிடுவதன் மூலம் மூட்டு வலியை குணமாக்க முடியும்.  இந்த மூட்டுவலி பொதுவாக 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வரலாம். எந்தவிதமான காரணமும் இல்லாமலும் வயதின் காரணமாகவும் வரலாம். அதிகமாக வாகனம் ஓட்டுவதாலோ, ஹார்மோன் கோளாறுகளாலோ ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை எடுத்தால் எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் குறையும்.

மாதவிடாய் நின்ற பின்னும் இந்த எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் குறைந்துவிடும். உடல் எடை அதிகரித்தாலும் மூட்டுவலி சீக்கிரமாக வரலாம். நடக்கும்போது கூட வலி ஏற்படலாம். இந்த நோய் எந்த மூட்டில் வேண்டுமானாலும் வரலாம். உடல் எடையை தாங்கக்கூடிய மூட்டுகள் அதிகமாக பாதிக்கப்படும்.

மேலும் சில காரணங்கள்கால் முட்டியை அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுத்துவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது. எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவது அல்லது உடைவது. இதனால் முட்டியின் உள், வெளி பகுதிகளில் வலி ஏற்படுத்தும். சுளுக்கு, மூட்டுக்களை முறுக்குவதால் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறு சிறு காயங்கள்.

முட்டியின் சிப்பி இடமாற்றம் அடைவது. மூட்டுகளில் நோய் தொற்றுவது. மூட்டுகளில் ஏற்படும் காயங்களால் முட்டியினுள் ரத்தக்கசிவு ஏற்பட்டு வலியை அதிகப்படுத்தும். இடுப்பில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது கோளாறுகளால் இடுப்பில் வலி ஏற்படும். இந்த வலி முட்டிப் பகுதிகளில் உணரப்படும்.

இடுப்பிலிருந்து முட்டி பகுதிக்கு செல்லும் கயிறு போன்ற அமைப்பில் காயம் ஏற்படுதல். எலும்பு மூட்டு தசையில் ரத்தம் உறைதல். முடக்கு வாதம் என்னும் வாத ரத்தம் தூங்கி எழுந்தவுடன் மூட்டுகளில் இறுக்கமும், வலியும் அதிகமாக தெரியும். இது வாத நோயில் ஒரு வகையாகும். குளிரான சூழ்நிலையில் அதிக வலி தெரியும்.

பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பரம்பரையாகவும், அடிபடுவதாலும், மன உளைச்சலாலும் வரலாம். வலியைக் குறைக்க கால் முட்டியினை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம். முட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம்.

சுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை கலந்து குடிக்க வேண்டும் மற்றும் மோர் குடிக்க வேண்டும். இது கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கும். இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது. வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம்.

முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கவும். முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும். சாப்பிடக்கூடியவை வாழைப்பழம், காய்கறி சூப் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும். மேலும் கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிடலாம். பூசணிக்காயில் கரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிடுவதால், மூட்டுகளில் ஏற்படும் காயங்கள், வீக்கங்கள் மற்றும் வலிகள் போன்றவை நாளடைவில் குணமாகும்.

ஆலிவ் எண்ணெய்யில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா ஃபேட்டி ஆசிட் உள்ளதால், அவை மூட்டுகளில் உள்ள பிரச்னையை சரி செய்யும். க்ரீன் டீயில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே அவை உடலின் மூட்டுகளில் ஏற்படும் வலியின் அளவை குறைத்துவிடும். மேலும் இதில் உள்ள நிக்கோட்டின் ஒரு சிறந்த வலி நிவாரணி.

பெண்கள் தவிர்க்க வேண்டியவை :

* பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவுகளான மாட்டிறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

* சமையல் எண்ணெய்களான சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய்யை தவிர்க்கவேண்டும்.

* கடல் சிப்பிகளில் ப்யூரின் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாகி, மூட்டுகளில் வலியும் அதிகமாகும்.

* சர்க்கரை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை அதிகமாவதோடு, மூட்டுகளில் அழுத்தம் அதிகரித்து, வலியும் அதிகமாகும்.

* யூரிக் ஆசிட் அதிகம் உள்ள உணவுகளான தக்காளியை சாப்பிட்டால், இன்னும் மூட்டு வலியானது அதிகமாகுமே தவிர குணமாகாது. எனவே வாத நோய்கள் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்கவேண்டும்.

* காரம், வறுத்த உணவுகள், டீ, காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* காய்கறிகளில் கத்திரிக்காய், சிவப்பு குடைமிளகாய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Related posts

‘தைராய்டு புயல்’ பற்றிய சில முக்கிய தகவல்கள்! தைராய்டு புயல் ஒரு அபாயகரமான நிலை

nathan

பெண்கள் தவறாமல் எடுக்க வேண்டிய பரிசோதனைகள்

nathan

நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பைத் தடுக்கும்

nathan

சிறுநீரக கற்களை கரைக்கும் வெந்தயம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இரட்டை கருவை சுமப்பது பற்றிய சில கட்டுக்கதைகள்!!!

nathan

அவசியம் படிக்க.. டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் கசாயம்

nathan

பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறையை மஞ்சளை வைத்து எப்படி போக்குவது என தெரியுமா?

nathan

இதய நோயை கட்டுப்படுத்தும் பாதாம்

nathan

உடல் வலியால் அவதிபடுபவர்களா.!அப்ப இத படிங்க!

nathan