24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
kidney stones remedy
மருத்துவ குறிப்பு

சிறுநீரகக் கற்கள் உருவாவதை எப்படி தெரிந்துகொள்வது?

ஒரு­வ­ருக்கு சிறு­நீ­ர­கத்தில் கல் ஏற்­பட்­டு­விட்டால், கீழ் வயிற்றில் அதீ­த­மான வயிற்­று­வலி ஏற்­படும். முதுகுப் பகு­தியில், சிறு­நீ­ரக மண்­ட­லத்தில் வலி அதி­க­மாக இருக்கும். சிறுநீர் கழிக்­கும்­போது எரிச்சல், ரத்தம் கலந்து வருதல் ஆகிய பிரச்சி­னைகள் இருக்கும். சிறு­நீ­ரகக் கல் இருப்­பதைக் கண்­ட­றிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே பரி­சோ­த­னைகள் போது­மா­னவை.
இதற்கு என்­னதான் சிகிச்சை?

சிறு­நீ­ர­கத்தில், சிறுநீர்ப் பையில், சிறு­நீ­ரகக் குழாயில் எங்கே கல் உள்­ளது என்று கண்­ட­றிந்­து­விட்டால், என்ன மாதி­ரி­யான சிகிச்சை அளிக்­கலாம் என்­பதை முடிவு செய்­து­வி­டலாம். சுமார் 5 மி.மீ. வரை அள­வுள்ள கற்­களை, மருந்து, மாத்­தி­ரைகள் மூல­மா­கவே கரைத்­து­வி­டலாம். பெரிய கற்­க­ளுக்கு வேறு மாதி­ரி­யான சிகிச்­சைகள் உள்­ளன.
வெளியில் இருந்து ஒலி அலைகள் மூலம் கல் உடைக்கும் முறை: (Extracorporeal shock wave lithotripsy)
இந்த முறையில் வெளியில் இருந்து அல்ட்ரா சவுண்ட் செலுத்­தப்­பட்டு கல் உடைக்­கப்­படும். 1 முதல் 1.5 செ.மீ. வரை அள­வுள்ள கற்­களை இந்த முறையில் அகற்­றலாம். ஆனால், கல் உடைக்­கப்­ப­டும்­போது அதன் சித­றல்கள் வேறு எங்­கேனும் சிக்­கிக்­கொள்ளும் ஆபத்து இதில் உண்டு.
துளை மூலம் சிறு­நீ­ர­கத்தில் கல் அகற்றும் அறுவைச் சிகிச்சை: (Percutaneous Nephro Lithotripsy)
ஒரு­கா­லத்தில் பெரிய சிறு­நீ­ரகக் கற்­களை அகற்ற திறந்த அறுவைச் சிகிச்சை செய்­யப்­பட்­டது. இதற்கு மாற்­றாக வந்­தது தான் இந்த முறை. முதுகில் சிறிய துளை போட்டு, 1.2 செ.மீ. அள­வுக்கு மேல் உள்ள கற்­களை வெளியே எடுக்கும் முறை இது.
பிறப்பு உறுப்பு வழியே கற்­களை அகற்றும் முறை (Retrograde intrarenal surgery):

எந்த அறுவைச் சிகிச்­சையும் இன்றி, பிறப்பு உறுப்பு வழி­யாக குழாய் போன்ற கரு­வியைச் செலுத்தி லேசர் கற்­றைகள் மூலம் கற்­களை உடைத்து வெளியே எடுக்கும் முறை இது. மெல்­லிய டெலஸ்கோப் துணை­யுடன் சிறு­நீ­ர­கத்தின் உள் அமைப்பைக் கணி­னியில் பார்த்­துக்­கொண்டே செய்­யப்­படும் சிகிச்சை இது என்­பதால், துல்­லி­ய­மான சிகிச்சை உத்­த­ர­வாதம். நோயா­ளிக்குத் துளி ரத்தச் சேதம்­கூட இந்த முறையில் ஏற்­ப­டாது என்­பது கூடுதல் நன்மை.
சிறு­நீ­ரகக் கற்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
தினமும் குறைந்­தது இரண்­டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நீர்ச் சத்து நிறைந்த காய்­கறி, பழங்­களைச் சாப்­பிட வேண்டும். கல்­சியம் ஆக்­சலேட், கல்­சியம் பாஸ்பேட் ஆகிய உப்­புக்­கள்தான் சிறு­நீ­ரகக் கற்கள் உரு­வாக முக்­கியக் கார­ணங்கள். எனவே, இவை உரு­வாக அதிக வாய்ப்­புள்ள மாட்­டி­றைச்சி மற்றும் ஆட்­டி­றைச்­சியைக் கூடு­மா­ன­வரை தவிர்க்­கலாம்.
சிறு­நீ­ரகக் கல் வந்­து­விட்டால், என்ன செய்ய வேண்டும்?
உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். பழச்­சாறு, இளநீர், வாழைத்­தண்டு சாறு அதிகம் சேர்த்­துக்­கொள்ள வேண்டும். வாழைத்­தண்டு சாறில் நார்ச் சத்தும் அதிக அளவில் உட­லுக்குத் தேவை­யான தாது உப்­புக்­களும் உள்­ளன. இவை சிறுநீர் கழிப்பைத் தூண்டும். இதனால், சிறிய சிறிய கற்கள் எல்லாம் வெளியே தள்­ளப்­படும். எலு­மிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலப் பழங்­களின் ஜூஸ் குடிப்­பதன் மூலம், அது சிறு­நீரில் அமிலத் தன்­மையைக் குறைத்து கல் உரு­வா­வதைத் தடுக்கும். ஒரு­வ­ருக்கு ஒரு முறை சிறுநீரகக் கற்களை அகற்றிவிட்டாலும் அடுத்த ஐந்து வருடங்களில் திரும்ப வருவதற்கு 50 சதவிகித வாய்ப்பு உண்டு. அதனால், அவர்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருத்தல் நல்லது!
kidney stones remedy

Related posts

சோம்பு நீரின் மருத்துவ குணங்கள்

nathan

சோதனைக் கூட விந்தணுக்கள் மூலம் குழந்தைகள் சாத்தியம்

nathan

மஞ்சள் பற்கள் மற்றும் ஈறு நோய்களைப் போக்க, தினமும் இத கொண்டு பல் துலக்குங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா மனிதர்கள் தொட்டாலே கூச்சப்படும் இலைக்கு இவ்வளவு சக்தியா?

nathan

மார்பக விரிவாக்க க்ரீம் மற்றும் திரவ மருந்துகள் =தெரிந்துகொள்வோமா?

nathan

நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு ஜோடிகள் கவனிக்க வேண்டியவை… தவிர்க்க வேண்டியவை!

nathan

தைராய்டு பிரச்சனை வராமல் இருக்கணுமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

நாம் இறக்கும் வரையில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் 2 உறுப்புகள்…

nathan

மனக்கவலையை போக்கும் மருந்தில்லா மருத்துவம்

nathan