26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Image 2021 05 06T002746.646
அழகு குறிப்புகள்

நெஞ்சை உலுக்கும் காட்சி! கொரோனா பாதித்த தந்தைக்கு தண்ணீர் கொடுக்க போராடிய மகள்..

ஆந்திராவில் ஒரு பெண் தனது இறக்கும் தந்தைக்கு குடிநீர் கொடுக்க போராடி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது.

இந்த துயர சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நிகழ்ந்தது.

விஜயவாடாவில் தங்கி வேலை செய்த 50 வயது நபர் ஒருவர் சமீபத்தில் தனது சொந்த ஊரான ஸ்ரீகாகுளத்திற்கு திரும்பினார். இருப்பினும், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்த நிலையில், ஊர் மக்கள் அவரை ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு குடிசையில் தங்க வைத்துள்ளனர். அதனால் அவரை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாமல் அவதிப்பட்டுவந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது மனைவியும் மகளும் அவரைப் பார்க்க வந்தபோது, ​​அவர் உயிருக்கு போராடி தரையில் படுத்துக் கொண்டிருந்தார்.

அவரது மகள் அதிர்ச்சியடைந்து, தந்தையை தண்ணீர் குடிக்க முயன்றாள்.

இருப்பினும், அருகில் சென்றால் மகளுக்கும் கொரோனா வந்துவிடும் என பயந்து சிறுமியின் தாய் அவரை தடுத்துள்ளார்.

இந்த போராட்டத்தில், ஒரு வழியாக சிறுமி தனது தந்தைக்கு தண்ணீர் கொடுக்கிறார். ஆனால், சில நொடிகளில் அவர் மகளின் கண்முண்ணே துடிதுடித்து இறந்து விடுகிறார்.

அவரது கையை தூக்கி பார்த்து அசைவில்லை என தெரிந்த மகள், மண்ணில் புரண்டு கதறி அழும் காட்சிகள் பார்ப்பவரின் நெஞ்சை உலுக்குகிறது.

இந்த காட்சிகளை யாரோ தூரத்திலிருந்து தங்கள் செல்போனில் வெளியிட்டனர்.

Related posts

பளிச் முகத்திற்கு பலவித பேக்குகள்

nathan

முகத்தில் உள்ள பருக்களை முழுவதுமாக விரட்டி அடிக்க ஒரு அற்புதமான வழி!…

sangika

உங்கள் முகத்திற்கு மிருதுவான மற்றும் பளபளப்பான தோற்றத்தை பெற பாதாம் எண்ணெயை பயன்படுத்தும் 10 வழிகள்!!

nathan

இதைTry பண்ணுங்க..! முகப்பரு, கருவளையம், முகசுருக்கம் இல்லாமல் போக…

nathan

பருக்கள் உங்க முகத்தையே கெடுக்குதா..? இனி அந்த கவலையை ஒட்டு மொத்தமா ஒழித்து கட்ட ஒரு எளிய வழி!…

sangika

முகம் பளபளப்பாக மாறணுமா? இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

nathan

அழகு குறிப்புகள், பளிச்சென்று இருக்க..,BEAUTY TIPS IN TAMIL

nathan

அற்புதமான அழகு குறிப்புகள்…!! சரும நிறத்தை மேம்படுத்த

nathan

அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபட்டு, நல்ல அழகும் பொலிவும் பெற சூப்பர் டிப்ஸ்!…

nathan