22.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
அலங்காரம்மேக்கப்

கண்களை அலங்கரிங்கள்

downloadsdsகண்களை மட்டும் நன்றாக அலங்கரித்துவிட்டாலே போதும் பாதி அழகு வந்துவிடும். எனவே உங்களைச் சொல்லும் கண்களை அழகாக அலங்கரித்துக்கொள்ளுங்கள். சிலருக்கு ஐ லைனர் போட தெரியாது.
ஆனால் தெரியாது என்று விட்டுவிட வேண்டாம். வீ–ட்டில் இருக்கும் போது போட்டு முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

நாளடைவில் நீங்களே பெரிய ஐ லைனர் கலைஞராக மாறி நண்பிகளுக்கு போட்டிவிட்டு சபாஷ் பெறுவீர்கள்.
சரி கண்களை எப்படி அலங்கரிப்பது என்று பார்ப்போம்:

உங்கள் கண்கள் பெரிய இமைகளை கொண்டிருப்பின் …

கண் இமைகள் சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷேடோக்களை இடவும்.

பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தை கொண்டு முடியுங்கள் .

கண்ணின் முனைப்பகுதியில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.

சிறிய கண்களைக் கொண்டவர்கள்..

நன்கு அழுத்தமான ஐ ஷேடோவை கொண்டு இமைகளின் மேற்பரப்புகளில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள்.

இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள் .

சிறிக கண்களும் தற்போது எடுப்பதாகத் தோன்றும் ….

கண்கள் மீது ஐ ஷேடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு, இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும்.

இது உங்கள் கண்களை அழகாக்கும்.

Related posts

மழைக்காலத்தில் மேக்அப் போடுவதெப்படி?

nathan

மாம்பழம் ஒரு அழகுசாதன பொருளா?தெரிஞ்சிக்கங்க…

nathan

கண்கள் மிளிர…

nathan

ஒட்டியாணம் இளம் பெண்கள் அவசியம் அணிய வேண்டுமாம்!…

sangika

சிறுமியருக்கு மிடுக்கான தோற்றத்தை தரும் மஸ்தானி

nathan

கண்ணாடி வளையல்களின் அற்புதங்கள்!…

sangika

பட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி? இதோ சில ஐடியாக்கள்…

nathan

மணப்பெண்க்கு டிப்ஸ்

nathan

எளிமையான மேக்கப் டிப்ஸ்!

nathan