26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
29 1446120194 raagi murukku
சிற்றுண்டி வகைகள்

ராகி முறுக்கு: தீபாவளி ரெசிபி

தீபாவளிக்கு வீட்டில் முறுக்கு சுடுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் சற்று வித்தியாசமாக ராகி முறுக்கை செய்து சுவையுங்கள். இந்த முறுக்கு சற்று சுவையானதும், ஆரோக்கியமானதும் கூட. உங்களுக்கு ராகி முறுக்கை எப்படி செய்வதென்று தெரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள்.

இங்கு ராகி முறுக்கை எப்படி எளிமையாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


29 1446120194 raagi murukku
தேவையான பொருட்கள்:

ராகி மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
கடலை மாவு – 1/4 கப்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
எள் – 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில ஒரு பௌலில் ராகி மாவு, அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், எள், வெண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மென்மையாக முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

பின் முறுக்கு உழக்கில் அந்த மாவை சிறிது வைத்து, பின் அதனை ஒரு காட்டன் துணியில் முறுக்கு போன்று பிழிய வேண்டும்.

அடுத்து பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், ராகி முறுக்கு ரெடி!!!

Related posts

பச்சைமிளகாய் காரச் சீடை

nathan

சுவையான சத்தான ஒட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

nathan

பச்சை பாசிப்பருப்பு சீயம்

nathan

கடலைப்பருப்பு ஸ்வீட் போண்டா

nathan

சுவையான ஸ்நாக்ஸ் கோதுமை மாவு தட்டை

nathan

சூப்பரான சிக்கன் போண்டா

nathan

முட்டைக்கோஸ் வடை

nathan

விளாம்பழ துவையல் செய்முறை விளக்கம்

nathan

குழந்தைகளுக்கான ரைஸ் நூடுல்ஸ் பான்கேக்

nathan