26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
ஆரோக்கியம்தொப்பை குறைய

தொப்பை குறைய பயிற்சி

beaff5b9-6f53-4b16-9a2f-a4c81203a88c_S_secvpfஇப்போதுள்ள காலகட்டத்தில் தொப்பையை குறைக்க ஜிம்முக்கு செல்பவர்கள் தான் அதிகம். ஜிம்முக்கு போக நேரம் இல்லாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அந்த வகையில் வீட்டில் செய்யக்கூடிய எளிய பயிற்சியை பார்க்கலாம். முதலில் சுவற்றிற்கு அருகில் படுத்துக்கொள்ளவும். தலை முதல் கால் வரை தரையில் இருக்கும்படியும், கால்கள் சுவற்றில் இருக்கும் படியும் (படத்தில் உள்ளபடி) படுக்கவும்.

கால்களை மடக்கால் சுவற்றில் நேராக நீட்டவும். பின்னர் மெதுவாக முன்புறமாக எழுந்து வலது கையால் இடது கால் பாதத்தை தொட வேண்டும். பின்னர் இடது கையால் வலது கால் பாதத்தை தொட வேண்டும்.

இவ்வாறு ஆரம்பத்தில் ஒவ்வொரு கால்களுக்கும் 20 எண்ணிக்கையில் செய்தால் போதுமானது. பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முறை செய்யலாம். இந்த பயிற்சி முதலில் செய்யும் போது மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் விரைவில் நல்ல பலன் தரக்கூடியது.

இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் உங்கள் தொப்பை சற்று குறைந்திருப்பதை காணலாம். முதுகு வலி உள்ளவர்கள், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த பயிற்சியை செய்ய கூடாது.

Related posts

விரைவில் தொப்பையை குறைக்கும் சூப்பர் டிப்ஸ்..

nathan

கோபத்தை கட்டுப்படுத்த தண்ணீர் உதவுகின்றதாம்!..

sangika

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அப்போ கட்டாயம் இத படிங்க!….

sangika

கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் உண்ணும் உணவுகள் தொடர்பில் தெரிஞ்சிக்கங்க…

nathan

உலோக அணிகலன்கள் அணிவதன் நன்மைகள் பற்றி தெரியமா?

sangika

மஞ்சள் தூள் அன்றாட உணவில் சேரும்போது கிடைக்கும் நன்மை!….

sangika

குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!

nathan

ஆயுளை காக்கும் பற்கள்

nathan

குளிர்காலத்தில் இவற்றை செய்கிறீர்களா?

sangika