28.3 C
Chennai
Tuesday, Feb 18, 2025
28 1443434712 thinai paniyaram
இனிப்பு வகைகள்

தித்திக்கும்… தினை பணியாரம்

இதுவரை அரிசி மாவைக் கொண்டு தான் பணியாரம் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் தானியங்களில் ஒன்றான தினையைக் கொண்டு பணியாரத்தை செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் இங்கு தித்திக்கும் தினை பணியாரத்தை எப்படி எளிமையாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


28 1443434712 thinai paniyaram
தேவையான பொருட்கள்:

தினை – 1/2 கப்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 4 1/2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெல்லத்தை 1/4 கப் நீரில் போட்டு அடுப்பில் வைத்து பாகு போன்று செய்து கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு தினையை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரை முற்றிலும் வடித்து, ஊறிய தினையை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக மாவானது ஓரளவு கெட்டியாக இருக்க வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் அரிசி மாவு, தேங்காய், வெல்லப் பாகு, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, 3 மணிநேரம் ஊற வைத்து, பின் அதில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். கல்லானது சூடானதும், குழிகளில் எண்ணெய் தடவி, பின் மாவை ஊற்றி, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின் ஒரு கம்பியால் அதனை திருப்பிப் போட்டு, மீண்டும் 3 நிமிடம் வேக வைத்து இறக்கினால், தித்திக்கும் தினை பணியாரம் ரெடி!!!

Related posts

தேங்காய் பர்பி

nathan

பயற்றம் உருண்டை// பயற்றம் பணியாரம்..

nathan

நாவூறும்… பரங்கிக்காய் அல்வா

nathan

சுவையான நவராத்திரி வெல்ல அவல்!

nathan

குலாப் ஜாமூன் மிக்ஸ் அல்வா

nathan

ரவா லட்டு செய்வது எப்படி

nathan

சாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள்….

sangika

எக்லஸ் கேரட் புட்டிங்

nathan

தீபாவளி ஸ்பெஷல் தித்திப்பான காஜு கட்லி

nathan