27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
06 gallbladde
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பித்தப்பை பிரச்சனைகளுக்கு 10 பிரம்மாதமான தீர்வுகள்!!

நம் உடலின் செரிமான செயல்பாடுகளில் பித்தப்பை ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. கல்லீரலிருந்து சுரக்கப்படும் கொலஸ்ட்ரால் முழுவதையும் இந்தப் பித்தப்பை தான் சேகரித்து வைத்துக் கொள்கிறது. இதனால் உடலில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது.

கல்லீரலுக்குப் பின்னால் ஒரு சிறிய பேரிக்காய் வடிவத்தில் இருக்கும் பை போன்ற உறுப்புதான் பித்தப்பை ஆகும். ஏராளமான மக்களுக்கு, குறிப்பாக, வயதானவர்களுக்கும் பெண்களுக்கும் பித்தப்பை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பித்தப்பை கற்களினால் ஏற்படும் வலி, எரிச்சல், நோய்த்தொற்று மற்றும் ஒருவித புற்றுநோய் ஆகியவை இப்பிரச்சனைகளுள் அடங்கும்.

இதில், பித்தப்பை கற்களினால் ஏற்படும் வலி மிகவும் கொடுமையாக இருக்கும். கொலஸ்ட்ரால் அதிகமாகச் சுரக்கும் போது, அளவுக்கு அதிகமாக வரும் கொலஸ்ட்ரால்கள் தான் பித்தப்பையில் கற்களாக சேர்கின்றன. பித்தப்பை பிரச்சனைகளை மருத்துவர்கள் எளிதாகத் தீர்த்து வைப்பார்கள். இருந்தாலும், வீட்டிலேயே மிகச் சுலபமாக இப்பிரச்சனைகளைத் தீர்க்க 10 வழிகள் உள்ளன. அவை குறித்து இப்போது பார்க்கலாம்.

காபி

தினமும் காபி குடித்து வந்தால், பித்தப்பை பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. காபி குடிக்காதவர்களை விட தினமும் 2 முதல் 3 கப் காபி குடிப்பவர்களுக்கு 40% குறைவாகத் தான் பித்தப்பை பிரச்சனைகள் ஏற்படுகிறதாம்.

நார்ச்சத்துள்ள தானியங்கள்

அதிகக் கொழுப்பு மற்றும் சர்க்கரை தான் பித்தப்பை பிரச்சனைகளுக்குப் பெரிதும் காரணமாக இருக்கின்றன. எனவே, அவை சார்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்த்து, நம் உணவில் நார்ச்சத்து அதிகமுள்ள தானியங்களைச் சேர்த்துக் கொள்வது அவசியம். அதிலும் தினமும் காலையில் ஒரு தானிய வகை உணவை சாப்பிட்டு வந்தால் நல்லது.

பயறு வகைகள்

பயறு வகைகளில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதுவும் பாசிப்பருப்பு உள்ளிட்ட பயறு வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் பித்தப்பை பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

சிவப்பு குடைமிளகாய்

ஒரு சிவப்பு குடைமிளகாயில் 95 மில்லி கிராம் அளவுக்கு வைட்டமின் சி உள்ளதாம். இந்த வைட்டமின் பித்தப்பை கற்களைக் கரைப்பதில் வல்லது. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நிறையச் சத்துக்களும் நமக்குக் கிடைக்கிறது.

எலுமிச்சை சாறு

அடிக்கடி நிறையத் தண்ணீரைக் குடித்து வந்தாலே பித்தப்பை தொடர்பான பிரச்சனைகளுக்கு விடை கொடுக்கலாம். இந்தத் தண்ணீருடன் வைட்டமின் சி அதிகமுள்ள எலுமிச்சை சாற்றையும் சேர்த்துக் கொண்டால், பித்தப்பைகளுக்கு இரட்டை நன்மை தான்!

காய்கறிகள்

அசைவம் சாப்பிடுபவர்களை விட சைவப் பிரியர்களுக்கு பித்தப்பை பிரச்சனைகள் குறைவாகவே ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காய்கறிகள் தான் இதற்கு முக்கியக் காரணமாகும். பச்சைக் காய்கறிகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் பித்தப்பை பிரச்சனைகள் ஓடிப் போகும்.

ஒயின்

தினமும் அரை டம்ளர் ஒயின் சாப்பிடுபவர்களுக்கு 40% குறைவாகவே பித்தப்பை பிரச்சனைகள் ஏற்படுகிறதாம். ரெட் ஒயினில் உள்ள ரெஸ்வெரட்ரால் தான் இதற்குக் காரணமாகும். திராட்சைப் பழங்கள் மற்றும் அவுரி நெல்லிப் பழங்களும் அதற்கு இணையாகப் பலன் கொடுக்கின்றனவாம்.

அல்ஃபால்ஃபா மாத்திரைகள் (Alfalfa)

அல்ஃபால்ஃபாவின் விதைகளானது கொள்ளு போன்று காணப்படும். இதன் இலைகள் கிராம்பு போன்று இருக்கும். நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவை இதில் நிறைந்துள்ளன. பித்தப்பை பிரச்சனைகளுக்கு இது ஒரு அருமையான தீர்வாகும். கல்லீரலையும் இது சுத்தம் செய்கிறது. மாத்திரை மற்றும் கேப்சூல் வடிவங்களிலும் இது கிடைக்கிறது. 2 நாட்களுக்கு ஒரு முறை இதை சுடுநீருடன் எடுத்துக் கொள்ளலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

இதுவும் பித்தப்பை பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸுடன் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடரைக் கலந்து சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

புதினா

பித்தப்பை மற்றும் கல்லீரலைச் சுத்தம் செய்ய இது முக்கியப் பங்கு வகிக்கிறது. பெப்பர்மிண்ட் கேப்சூலாகவும் இது கிடைக்கிறது. தொடர்ந்து இதை எடுத்துக் கொண்டால் பித்தப்பை தொடர்பான எல்லாப் பிரச்சனைகளும் சரியாகும்.

Related posts

உங்க பெற்றோருக்கு மாரடைப்பு வரப்போகுது என்பதைக் குறிக்கும் ஆரம்ப அறிகுறிகள்

nathan

குடைமிளகாய் மருத்துவ பலன்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா ஞாபக மறதி ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…விளையாட்டுக்களினால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளதா?

nathan

இல்லறம் இனிக்க கணவரிடம் பெண்கள் எதிர்பார்ப்பது

nathan

ஸ்தன ரோகம் – பெண்ணின் மார்பக நோய் நிதானம் & சிகிட்சைகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அழகுப் பயன்பாட்டில் துலுக்கச் சாமந்தி செய்யும் சில அற்புதங்கள்!!!

nathan

இரட்டைக் குழந்தைகள் பெத்துக்க ஆசைப்படுறீங்களா?

nathan

தனிமை விரும்பியா நீங்கள்?

nathan