30 keralachickenfry
அசைவ வகைகள்

கேரளா சிக்கன் ப்ரை

என்னென்ன தேவை?

சிக்கன் – 1/2 கிலோ,
சோம்பு பொடி – 2 டேபிள் ஸ்பூன்,
வர மிளகாய் – 5-6,
பூண்டு – 6-7 பற்கள்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவையான அளவு,
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?

முதலில் மிக்ஸியில் வரமிளகாய், சோம்பு பொடி, பூண்டு, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி, பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கேரளா ஸ்டைல் சிக்கன் ப்ரை ரெடி!!!
30 keralachickenfry

Related posts

லெமன் ஃபிஷ் ஃப்ரை… இதுவரை மீனை இப்படி சாப்பிட்டு இருக்க மாட்டீங்க..!

nathan

ஹெர்ப் சிக்கன் ஃப்ரை

nathan

தாய்லாந்து ஃப்ரைடு ரைஸ்

nathan

சைனீஸ் இறால் ப்ரைட் ரைஸ்,tamil samayal kurippu,tamil samayal tips

nathan

நண்டு தொக்கு மசாலா

nathan

ஸ்பைசியான… இறால் பெப்பர் ப்ரை

nathan

சூப்பரான பைனாப்பிள் தாய் சிக்கன்

nathan

நாட்டு ஆட்டு குருமா

nathan

சூப்பரான ஐதராபாத் சிகம்புரி கபாப்

nathan