24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
potato bonda
சிற்றுண்டி வகைகள்

உருளைக்கிழங்கு போண்டா

தேவையானவை:

உருளைக்கிழங்கு – 300கிராம்
கோதுமை மாவு – 100 கிராம்
கடலை மாவு – 100 கிராம்
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 8
எலுமிச்சம் பழம் – 1
கொத்துமல்லி, உப்பு,
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் உருளைக்கிழங்கை மசித்து வாணலியில் போட்டு கிளறி, கொத்துமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

உருளைக்கிழங்கை நன்கு கிளறி தேவையான அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

அதன்பிறகு, கடலை மாவு, கோதுமை மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கரைத்து அதில் முக்கி எண்ணெயில் பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.

Related posts

முந்திரி வடை

nathan

அவல் ஆப்பம்

nathan

பிரெட் மசாலா

nathan

செட் தோசை

nathan

கேழ்வரகு இனிப்பு புட்டு செய்வது எப்படி

nathan

பச்சை பட்டாணி கச்சோரி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான இட்லி டிக்கா

nathan

சத்தான வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

nathan

ஈஸியான ரவா பொங்கல் செய்ய…

nathan