24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
autoimmune skin diseases
மருத்துவ குறிப்பு

அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்!

வெயில் காலங்களில் தாக்கும் நோய்களில் ஒன்றுதான் அக்கி நோய் ஆகும்.இதுவும் அம்மை நோயினைப் போன்று வைரஸ் கிருமிகளால் வருவதுதான்.

ஆனால் அக்கிநோய் என்பது புதிதாக வருவதல்ல அம்மை நோய் முன்பு தாக்கியவர்களிடம்தான் இந்நோய் வருகின்றது.அம்மை நோய் வந்து போன பிறகு இந்த வைரஸ் கிருமிகள் முழுமையாக நீங்கி விடுவதில்லை.

சில அம்மை வைரஸ் கிருமிகள் உடலில் தங்கி விடும்.இவை பல வருடங்க ளுக்குப் பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது வெளி வந்து அக்கி நோய் ஆக தோன்றும்.

இந்த நோய்க்கு கிராமங்களில் மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் செல்வார்கள்.அவர்கள் காவி மண்ணினால் அக்கி நோய் கண்டவரின் காளி அம்மன் போன்று உருவம் உடலில் வரைந்து மந்திரம் செபித்து அனுப்பி விடுவார்கள். வலியும்,வேதனையும் நீங்கி குணமடைவர்.

அக்கி நோய்க்கு சித்த மருத்துவ முறையில் அனுபவ முறை தீர்வுகள்.

மருந்து – 1
நாட்டு மருந்து கடைகளில் பூங்காவி எனக் கேட்டால் கொடுப்பார்கள். அதனுடன் பன்னீர் வாங்கி வந்து பூங்காவி பொடியை துணியில் வைத்து சளித்து எடுத்து பன்னீர் சேர்த்து குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச்சல்,வலி, வேதனை குறையும்.

மருந்து – 2
ஊமத்தை இலை பறித்து வந்து அரைத்து அதனுடன் வெண்ணை சேர்த்து கலந்து அக்கியின் மேல் பூசவும்.கொப்புளங்கள் அடங்கும்.எரிச்சல்,வலி குறையும்.தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வரவும்.
உணவில் காரம்,உப்பு,குறைக்கவும்.குளிர்ச்சியான உணவுகள் உண்ணவும். வெயிலில் அலையக்கூடாது,

மருந்து – 3
சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய பற்பம் 10-கிராம் வாங்கி அதில் ஒரு மொச்சை அளவு எடுத்து வெண்ணையில் [எலுமிச்சை]அளவு கலந்து காலை மாலை உண்ணவும்.7-நாள் தொடர்ந்து மருந்தை உண்ணவும். அக்கி குணமாகும்.
autoimmune skin diseases

Related posts

உங்களுக்கு தெரியுமா மாதவிடாயை தள்ளிப் போட உதவும் இயற்கை வைத்தியங்கள்!!

nathan

எளிதாக கட்டுபடுத்தக்கூடியதே நீரிழிவு நோய்!

nathan

அந்த 3 நாட்களை மாத்திரையால் தள்ளிப் போடலாமா?

nathan

உங்க இடுப்பளவு அதிகமா?? இதாங்க காரணம்!!

nathan

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இதோ சில வழிகள்! !

nathan

பசியின்மையை போக்கும் நெல்லிக்காய்

nathan

உங்களுக்கு கண் அடிக்கடி அரிக்குதா? சூப்பரா பலன் தரும்!!

nathan

மலச்சிக்கல் உடனடியாக குணம் பெற சூப்பர் பாட்டி வைத்தியம்….

nathan

இந்த ஆபத்து வரலாம்!அடிக்கடி பட்ஸ் யூஸ் பண்றிங்களா?

nathan