26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
06 1365245154 samudrika pattu1
அழகு குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தமிழ் புத்தாண்டிற்கு விரும்பி அணியக்கூடிய பாரம்பரிய புடவைகள்!!!

தமிழர்கள், தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் சித்திரை 1 ஆனது, ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வருகிறது. இது தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த நாளன்று, மக்கள் இந்த வருடம் நன்றாக அமைய வேண்டுமென்று, புதிய ஆடைகளை அணிந்து, கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருவார்கள். அது மட்டுமின்றி, பலகாரங்கள் செய்தும், விருந்தினர் வீட்டிற்கு சென்றும் இந்த நாளை சிறப்புடன் கழிப்பார்கள்.

அதிலும் பெண்கள் சாதாரண சிறு பண்டிகை என்றாலே தவறாமல் நல்ல ஃபேஷனான புடவைகளை வாங்கி அணிய நினைப்பார்கள். அதிலும் ஆண்டின் முதல் நாளான சித்திரை ஒன்றில் வாங்கமாட்டார்களா என்ன? அதுமட்டுமின்றி, பொதுவாக பெண்கள் எப்போதும் வாங்க நினைப்பது பட்டுப்புடவை தான். அதிலும் அந்த புடவையில் விலை மதிப்புள்ள புடவைகளை விட, நல்ல அழகான, தரமான மற்றும் விலை குறைவான புடவைகளையே வாங்க ஆசைப்படுவார்கள்.

அத்தகையவர்களுக்காக நல்ல ஃபேஷனாகவும், உடுத்துவதற்கு இதமாகவும், பார்ப்பதற்கு கிராண்டாகவும் இருக்கும் வகையில், தற்போது மார்க்கெட்டில் பல புடவை கலெக்ஷன்கள் உள்ளன. அதில் காஞ்சி பட்டு, சாமுத்ரிகா பட்டு, டசர் சில்க்ஸ், பரம்பரா பட்டு, வஸ்தரகலா பட்டு மற்றும் பல குறிப்பிடத்தக்கவை.

இருப்பினும் போல்டு ஸ்கை தமிழ் உங்களுக்காக, மிகவும் சிறப்பானதாகவும் மற்றும் அனைவரும் வாங்குவதற்கு ஏற்ற விலையிலும் இருக்கும் ஒருசில புடவைகளை பார்வைக்கு கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து வாங்கி உடுத்தி, சித்திரை 1-ஐ சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள்.1 1

டபுள் ஷேடட் சாமுத்ரிகா பட்டு

சாமுத்ரிகா பட்டு அதிகமான விலை என்று நினைக்கலாம். ஆனால் அவற்றின் விலை அதிகம் இருந்தாலும், அதன் தரம் நன்றாக இருக்கும். அதிலும் இரண்டு நிறங்களின் நிழல் போன்று தெரியும் டபுள் ஷேடட் பட்டுவில், பச்சை மற்றும் மஞ்சள் கலந்து காணப்படும் இந்த புடவையை உடுத்தினால் சூப்பராக இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்

விலை: ரூ. 45,985

நிறம்: டபுள் ஷேடட் (பச்சை மற்றும் மஞ்சள்)06 1365244896 designer sarees1 600

வானத்து நீலம் மற்றும் ஊதா நிற டிசைனர் சேலை

நீலம் மற்றும் ஊதா கலந்துள்ள டிசைனர் சேலையை, ஏதேனும் விழாக்களின் போது உடுத்தினால், பார்ப்பதற்கு சிம்பிளாகவும், ஆனால் கிராண்டாகவும் இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்

விலை: ரூ. 12,815

நிறம்: வானத்து நீலம் மற்றும் ஊதா06 1365244702 kancheepuram rs.5925

வெந்தய கலர் காஞ்சி பட்டு

காஞ்சிபுரப் பட்டு புடவையில் உடல் முழுவதும் வெந்தய கலரும், மெரூன் கலர் பார்டர் கொண்ட, இந்த புடவை உடுத்துவதற்கு நன்றாக இருப்பதோடு, விலை குறைவாகவும் உள்ளது.

பிராண்ட்: போத்தீஸ்

விலை: ரூ.5,925

நிறம்: வெந்தய கலர் மற்றும் மெரூன் பார்டர்06 1365245120 samudrika pattu3 45 600

இன்டிகோ ப்ளூ சாமுத்ரிகா பட்டு

சாமுத்ரிகா பட்டுவில் ஓரளவு விலையில் மற்றும் பார்ப்பதற்கு லட்சணமாகவும் இருக்க வேண்டுமெனில் அதற்கு இந்த இன்டிகோ ப்ளு நிற புடவை சரியாக இருக்கும். அதிலும் இந்த புடவைக்கு அவ்வளவாக எந்த அணிகலனும் தேவையில்லை. கழுத்தில் மட்டும் எடுப்பான நெக்லேஸ் போட்டாலே, சூப்பராக இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்

விலை: ரூ. 16,875

நிறம்: இன்டிகோ ப்ளூ06 1365244843 designer sarees2

க்ரீம் நிற நெட் டிசைனர் சேலை

புடவைகளில் நெட் டிசைனிலும், அழகான க்ரீம் நிறத்தில், ஆங்காங்கு சிறு கல் வேலைபாடுகளுடன் இருக்கும் இந்த டிசைனர் சேலை பார்த்தால், விலை அதிகமாக இருப்பது போல் தெரிந்தாலும், உண்மையில் விலை குறைவானது.

பிராண்ட்: போத்தீஸ்

விலை: ரூ. 10,875

நிறம்: க்ரீம்06 1365244806 banaras silk rs.17255

பிங்க் நிற பனாரஸ் சில்க்

பனாரஸ் சில்க்கில் பிங்க் நிற உடலில், கோல்டன் நிற இலை போட்டு, பச்சை நிற பார்டர் இருக்கும், இந்த புடவை உடுத்தினால் கிராண்டாக தெரியும்.

பிராண்ட்: போத்தீஸ்

விலை: ரூ. 17,255

நிறம்: பிங்க் மற்றும் பச்சை நிற பார்டர்06 1365244947 parampara pattu2 and 3

வெந்தயம் மற்றும் பச்சையுடன் கூடிய மெரூன் பார்டர் பரம்பரா பட்டு

பரம்பரா பட்டுவில் இரண்டு பார்டர்கள் கொண்டதில், பார்ப்பதற்கு அழகான காம்பினேஷனில் இருப்பது, வெந்தயம் மற்றும் பச்சையுடன் கூடிய மெரூன் நிற பார்டர் கலந்த இந்த புடவை சூப்பராக இருக்கும். மேலும் இதன் முந்தானை அழகான வகையில் நெய்யப்பட்டுள்ளது. இதற்கு காலர் வைத்த ஜாக்கெட் அணிந்தால் அழகாக இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்

விலை: ரூ. 15,675

நிறம்: வெந்தயம் மற்றும் அடர் பச்சையுடன் கூடிய மெரூன் பார்டர்06 1365245855 fsdffas

மயில் நீல பராம்பரா

இந்த மயில் நீல பட்டுப் புடவையில் ஒரு பக்கம் பெரிய பார்டரும், மறுபக்கம் சிறு பார்டரும் மற்றும் மாம்பழ டிசைன் போட்ட முந்தானை உள்ளது. இதற்கு சாதாரணமாக பா கழுத்துள்ள ஜாக்கெட் தைத்து, அதன் இருமுனைகளிலும் ஜன்னல் போன்ற இரண்டு கோடுகளை தைத்து, போட்டால், அருமையாக இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்

விலை: ரூ. 18,755

நிறம்: மயில் நீலம்06 1365245073 parampara pattu2

ஆரஞ்சு மற்றும் வெந்தய நிற பரம்பரா பட்டுப்புடவை

பெண்கள் விரும்பி அணிய நினைக்கும் பட்டுவில் பராம்பரா பட்டு ஒன்று. இந்த பட்டுவில் விலை குறைவாகவும், அழகான கலர் காம்பினேஷனுடன் காணப்படுவது, ஆரஞ்சு மற்றும் அடர் மஞ்சள் கலந்த, மாம்பழ டிசைன் போட்ட, இந்த பரம்பரா பட்டு தான். இதற்கு சாதாரணமாக ஜாக்கெட் அணிந்து, நன்கு எடுப்பான அணிகலன்களை அணிந்தால், சூப்பராக இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்

விலை: ரூ. 13,555

நிறம்: ஆரஞ்சு மற்றும் வெந்தய நிறம்06 1365245219 vastrakala pattu4 600

மெரூன் மற்றும் கோல்டன் பார்டர் வஸ்த்ரகலா பட்டு

சற்று ஜொலிக்கும் வகையில் புடவை வாங்க வேண்டுமெனில் அதற்கு வஸ்த்ரகலா பட்டு தான் சரியாக இருக்கும். அதிலும் இந்த மெரூன் மற்றும் கோல்டன் நிற பார்டருடன், ஆங்காங்கு சிறு வேலைபாடுகளுடன் கொண்ட, இந்த புடவையை அணிந்தால், நன்றாக இருக்கும். மேலும் இந்த புடவைக்கு மேட்சாக இருக்கும் அணிகலன்களை அணிய வேண்டும்.

பிராண்ட்: போத்தீஸ்

விலை ரூ. 14,225

நிறம்: மெரூன் மற்றும் கோல்டன் பார்டர்

சர்வ லட்சண பலவண்ண சாமுத்ரிகா பட்டு06 1365245154 samudrika pattu1

சாமுத்ரிகாவிலும் பல்வேறு வண்ணங்கள் கலந்துள்ள பட்டுப் புடவைகள் உள்ளன. அத்தகையவற்றில் இங்குள்ள சிவப்பு, ரோஸ், கோல்டன் கலந்திருக்கும் சாமுத்ரிகா பட்டு சூப்பராக இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்

விலை: ரூ. 28,055

நிறம்: சிவப்பு, ரோஸ், கோல்டன் கலந்தது

வெளிர் நிற பிங்க் மற்றும் கோல்டன் எம்பிராய்டரி06 1365245247 vastrakala pattu3 600

பெண்களுக்கு பிங்க் நிறம் என்றாலே மிகவும் பிடிக்கும். அத்தகையவர்களுக்கு வஸ்த்ரகலாவில், கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ள இந்த பிங்க் நிற புடவை சரியானதாக இருக்கும். இது பார்ப்பதற்கு அதிக விலை போல் தெரிந்தாலும், இதன் தரத்தால் நிச்சயம் வாங்கலாம்.

பிராண்ட்: போத்தீஸ்

விலை: ரூ. 16,085

நிறம்: வெளிர் நிற பிங்க் மற்றும் கோல்டன் எம்பிராய்டரி

ஊதா மற்றும் கோல்டன் எம்பிராய்டரி பார்டர் வஸ்த்ரகலா பட்டு06 1365245281 vastrakala pattu 600

இந்த ஊதா நிற எம்பிராய்டரி வஸ்த்ரகலா பட்டுவில், ஆங்காங்கு சிறு மணிகளால் எம்பிராய்டர் செய்யப்பட்டுள்ளது. அதிலும் இதற்கு போடும் ஜாக்கெட்டின் கைகளுக்கு, சேலையில் வரும் பார்டரை வைத்து தைத்தால், பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்

விலை: ரூ. 20,045

நிறம்: ஊதா மற்றும் கோல்டன் எம்பிராய்டரி பார்டர்

நீலம் கலந்த பச்சை நிற வசுந்தரா பட்டு06 1365245313 vasundara 1 600

பட்ஜெட்டுக்கு ஏற்றவாறும், அழகான டிசைனிலும் புடவை வாங்க வேண்டுமெனில், அதற்கு வசுந்தரா பட்டு சரியானதாக இருக்கும். அதிலும் இந்த நீலம் கலந்த பச்சை மற்றும் ஊதா நிற பார்டர் கொண்ட புட்டு புடவை சூப்பராக இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்

விலை: ரூ. 4,205

நிறம்: நீலம் கலந்த பச்சை மற்றும் ஊதா நிற பார்டர்

ராமர் நீல டசர் சில்க்06 1365245401 tussar silks1

பார்ப்பதற்கு சிம்பிளா இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், டசர் சில்க் வாங்கலாம். அதிலும் ராமர் நீலம் மற்றும் வெந்தய நிற பார்டருடன் கூடிய புடவை அழகாக இருக்கும். இதன் விலையை சொன்னால் நம்பமுடியாது தான். இருப்பினும், இது தரமுள்ளதாக நீண்ட நாட்கள் உழைக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்

விலை: ரூ. 6,305

நிறம்: ராமர் நீலம் மற்றும் வெந்தய பார்டர்

மஞ்சள் நிற வசுந்தரா06 1365245346 vasundhra pattu3 600

மஞ்சள் நிறம் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், வசுந்தரா பட்டுவில் உள்ள வெளிர் பச்சை மற்றும் மஞ்சளுடன் கூடிய மஞ்சள் பார்டர் கொண்ட புடவையை அணியலாம். அதை அணிந்தால், சற்று கிராண்டாகவும், சிம்பிளாவும் இருக்கும். விலையும் குறைவானது. குறிப்பாக இதற்கு இங்கு குறிப்பிட்டுள்ளது போல், ஜாக்கெட் அணிந்தால், சூப்பராக இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்

விலை: ரூ. 5,775

நிறம்: வெளிர் பச்சை மற்றும் மஞ்சளுடன் கூடிய மஞ்சள் பார்டர்

Related posts

வாரிசு படத்தின் ட்ரைலர் – வெளிவந்த தகவல் !

nathan

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் C மற்றும் ஆண்டிஆக்ஸைட் அதிகளவு உள்ளதால் இவற்றின் தோலை முக அழகிற்கு பயன்படுத்தும் போது சருமம் பொலிவுடனும், வெண்மையாகவும் காணப்படும்.

nathan

உங்க முகம் பளபளக்க எளிய ஃபேஸ் வாஷ்! அதிக செலவு இல்லை…

nathan

நீங்களே பாருங்க.! படையப்பா படத்தில் ரஜினிக்கு இரண்டாவது மகளாக நடித்த இந்த பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..?

nathan

தழும்புகளில் இருந்து தப்பிக்கணுமா?

nathan

முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்!

nathan

சருமத்தை வெள்ளையாக மாற்ற எலுமிச்சையைப் பயன்படுத்தும் வழிகள்!!!

nathan

காலையில் எழுந்ததும் எதனை கொண்டு பல துலக்குகுறீர்கள்!…

sangika

கால்களில் இருக்கும் முடியை அகற்றுவதற்கு இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்!…

sangika