23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
6
மருத்துவ குறிப்பு

“எத்தனை நாளுக்கு பிரஷ்ஷை பயன்படுத்துவது’

கணேசன், கோவை: குளிரில் வெளியே செல்லும்போது எனக்கு பல்வலி, கூச்சம் வருகிறது. சாதாரணமாக குளிர்காலத்தில் பல்வலி அதிகம் வருமா? இதை சமாளிக்க என்ன செய்வது?

நம் பற்களுக்கு இயற்கையாகவே, தட்பவெப்ப நிலையை ஏற்றுக் கொள்ளும் திறன் உள்ளது. நமது பற்கள், 70 டிகிரி சென்டிகிரேட் கொண்ட சூடான காபியையும், 1.5 டிகிரி சென்டிகிரேட் குளிர்ந்த நீரையும் தாங்கும் சக்தி கொண்டவை. குளிர் காற்றில் நிற்கும்போதோ, குளிரில் வெளியே செல்லும்போதோ, இந்த தட்பவெப்பம், மிகக்குறைந்த காலத்தில் மிகவேகமாக மாறும்.
அப்போது பற்களின் மேல் ஒருவித அழுத்தம் ஏற்படும். நாளடைவில் இந்த அழுத்தம் பற்களுக்குள் கண்ணுக்குத் தெரியாத அளவிலான விரிசல்களை உண்டாக்கும். இவையே வலி மற்றும் கூச்சம் வர காரணம் ஆகும். இதை தடுக்க, அந்த விரிசல்களை அடைக்கும் விதமாக பற்களின் மேல் “சீலன்டஸ்’ எனப்படும் ஒரு வகை மருந்தை பூச வேண்டும். பல் டாக்டரின் ஆலோசனைப்படி சரியான இடைவெளியில் இதை செய்தால் நல்ல பலன் இருக்கும்.

சபரிநாதன், தூத்துக்குடி: ஒருநாளில் எத்தனை முறை பல் துலக்க வேண்டும்? பற்களில் சொத்தை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை பல் துலக்கும் “பிரஷ்’ஷை மாற்ற வேண்டும்?

ஒரு நாளில் எத்தனை முறை பல் துலக்குவது என்பதைவிட, எப்படி முறையாக பல் துலக்குவது என்பதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்குவது நல்லது. அவசியம் பிரஷ் தேர்வு செய்யும்போது, மிகக்கடினமாக இல்லாமல் இருந்தால் நல்லது. பல் துலக்கும்போது, நீளவாக்கில் தேய்க்காமல், மேலும், கீழுமாய் தேய்க்க வேண்டும்.
ஏனெனில் நீளவாக்கில் தேய்க்கும்போது, பற்களில் தேய்மானம் அதிகம் ஏற்பட்டு, கூச்சம் வரும். பற்கள், ஈறுகள் மற்றும் நாக்கு என வாயின் அனைத்து பகுதிகளையும் கவனித்து சுத்தம் செய்ய வேண்டும். 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். “புளூரைடு’ உள்ள பேஸ்ட் கொண்டு பல் துலக்குவது நல்லது. பற்களில் கூச்சம் இருந்தால் அதற்கான பிரத்யேகமான பேஸ்ட் பயன்படுத்த வேண்டும். சரியான பராமரிப்பின் மூலம் பற்சொத்தை வருவதை குறைக்கலாம்.
– டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
6

Related posts

தாயின் கருவறைக்குள் குழந்தைகள் ஏன் உதைக்கிறார்கள்?

nathan

உங்கள் துணையிடம் அன்பை அதிகரிக்க உரையாடுங்கள்

nathan

வயிற்றில் புண் ஏற்பட என்ன காரணம்?

nathan

பிராணாயாமத்தை சரியாக எப்படிச் செய்வது?

nathan

தெரிஞ்சிக்கங்க…கர்ப்பக் காலத்தில் பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது…

nathan

உங்களுக்கு மார்பு அடிக்கடி குத்துற மாதிரி இருக்கா? கட்டாயம் இதை படியுங்கள்….

nathan

உங்க பாத்ரூம் ‘கப்பு’ அடிக்குதா? அதைப் போக்க சில வழிகள்!!!

nathan

மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க… மாதவிடாய் இரத்த போக்கின் நிறத்தை வைத்து உங்களின் ஆரோக்கியத்தை அறியலாம்!!

nathan