625.500.560.350.160.300.053.800.900.1 3
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா வாயுத்தொல்லையை குணமாக்க உதவும் அற்புத குறிப்புகள்..

இன்றைய காலத்தில் நாகரிக உணவுப் பழக்கம் என்ற பெயரில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும் எப்போது சாப்பிட ஆரம்பித்தோமோ, அப்போதிலிருந்து பலரையும் வருத்தி எடுக்கும் பிரச்சினையாக இது உருமாறிவிட்டது.

அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் உணவுப்பாதைப் பிரச்சினையை வாயுத் தொல்லை என்றழைக்கப்படுகின்றது.

இதற்கு நம்மில் சிலர் அடிக்கடி மாத்திரை எடுப்பதுண்டு. இது முற்றிலும் தவறாகும். வீட்டில் இருக்கும் பொருட்களை கூட கொண்டு எளிய முறையில் சரி செய்ய முடியும்.

அந்தவகையில் தற்போது வாயுத்தொல்லையை குணமாக்க உதவும் சில அற்புத குறிப்புகள் பற்றி இங்கு பார்ப்போம்.

சீமை சாமந்தி டீ பேக் வாங்கி தண்ணீரில் தேநீர் தயாரித்து குடித்தால், வாய்வுத் தொல்லை வராமல் தடுக்கும். வந்தாலும் உடனடி நிவாரணம் தரும்.
வாழைப்பழம் மிகச் சிறந்த பலனை தரும். வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் உடனடியாக வாழைப் பழம் சாப்பிட்டால் கட்டுப்படுத்திவிடும்.
தேங்காய் துருவலை சாப்பிடலாம் அல்லது தேங்காய் நீர் அல்லது தேங்காய் பாலை குடிப்பதால் வாய்வு தொல்லை குணமாகிறது. இவை ஜீரண உறுப்புகளை ஆசுவாசப்படுத்தி அமில உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.
புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெய்யை வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.
மிளகை பொடி செய்து 50 கிராம் எடுத்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து 20 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி, கால் டம்ளர் அளவு என மூன்று வேளை அருந்தினால் வாயுத் தொல்லை குணமாகும்.
சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும். காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், மற்றும் சுக்கு இவற்றில் தேவையான அளவு சமமாக எடுத்து இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வாயுத் தொல்லைக் குணமாகும்.

Related posts

அளவுக்கு மீறினால் நஞ்சு! அதுவே.. அளவாக குடித்தால்?

nathan

வைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்பு குடிநீர்

nathan

இளம்பெண்களை குறிவைக்கும் இதயநோய்

nathan

உங்களுக்கு தெரியுமா தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள்

nathan

இரட்டைக் குழந்தை வேண்டுமா? இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

nathan

தாங்க முடியாத பல்வலிக்கு இயற்கை வைத்தியம்

nathan

உங்க குழந்தைக்கு இந்த அறிகுறியெல்லாம் இருந்தா அலட்சியப்படுத்தாதீங்க..

nathan

இதோ எளிய நிவாரணம்! குதிகால் வெடிப்பைப் போக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க…

nathan

குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது என்று தெரியுமா?

nathan