உலகில் எந்தவொரு கர்ப்பிணியும் சுக பிரசவ வழியிலேயே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென விரும்புவாள். அதுதான் குழந்தையின் எதிர்காலத்திற்கும் கர்ப்பிணியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
ஒரு கர்ப்பிணிப் பெண் தனது பிரசவ காலத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பாள். ஏற்கனவே மருத்துவர் குழந்தை பிறக்கும் கால நேரத்தை குறித்து கணித்து கர்ப்பிணிப் பெண்ணிடம் அறிவித்திருப்பார்.
பொதுவாக மருத்துவர் இதை அதிநவீன அல்ட்ரா சவுண்ட் கருவியின் உதவியுடன் அறிந்து கொள்வார். அல்லது மாதவிடாய் சுழற்சியைக் கொண்டும் இந்த நாளை துல்லியமாகக் கணக்கிட இயலும்.
அதாவது கர்ப்பம் தரித்துள்ள பெண்ணிற்குக் கடைசியாக மாதவிடாய் எப்போது நிகழ்ந்தது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.அந்த தேதியைச் சரியாகக் குறித்துக் கொள்ளக் கொண்டும். இந்த தேதியிலிருந்து சுமார் 40 வாரங்கள் என்ற அளவில் கணக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே குழந்தை பிறப்பதற்கான கால நேரமாகும்.
தற்போது பெண்கள் பிரசவத்தில் எவ்வாறான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், கர்ப்பப்பையை எடுக்கும் பிரச்சினை எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை இங்கு காணலாம்.