பிட்னஸ் நிபுணரின் ஆலோசனைப்படி எளிமையான உடற்பயிற்சிகளை வீட்டிலிருந்தபடியே செய்து இடுப்பை அழகுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் ஜிம்முக்கு சென்றும் செய்யலாம்.
ஸ்கிப்பிங், ஜம்ப்பிங் போன்ற குதித்தல் பயிற்சிகளை ஒருவரால் எளிமையாக செய்யமுடிகிறது எனில் அவரது உடல்நலமும் இதய நலமும் மிக நல்ல நிலையில் இருக்கிறது என அர்த்தம். ஜிம் உபகரணங்கள் கொண்டு பிட்னஸ் நிபுணரின் மேற்பார்வையில் செய்ய வேண்டிய பயிற்சிகள்
1. ரொட்டேடரி டார்சோ (Rotatory Torso) இந்த உபகரணத்தில் இரு பக்கமுள்ள இடுப்புக்கான பயிற்சியை ஒரே நேரத்தில் செய்யமுடியும். பக்கவாட்டு இடுப்பு தசைகளை வலுவாக்கும்.
2. லெக் பிரஸ் (Leg press) இந்த உபகரணத்தில் உட்கார்ந்த படி முன்னால் உள்ள போர்டை கால்களால் அழுத்தித் தள்ளவேண்டும். முட்டி மற்றும் இடுப்பு தசைகள் வலுவடையும்.
3. ஹிப் அடக்டார்ஸ் (தசைகளை வலுப்படுத்தும் உபகரணம்) (Hip Adductors) இதில் பயிற்சி செய்வதன் மூலம் உள் தொடை தசைகளில் தேவையற்ற கொழுப்பு குறையும். தொடைகள் அழகாகும்.
4. லெக் கர்ல்ஸ் (Leg Curls) இதில் பயிற்சி செய்வதால் பின்பக்க தொடை தசைகள் வலுவடையும். கால்கள் அழகாகும்.
5. ஸ்டிக் ட்விஸ்ட் (Stick Twist) குச்சியை தோளில் வைத்தபடி இருபக்கமும் மாறி மாறி திரும்பி செய்ய வேண்டும். ஒப்ளிக் மற்றும் ட்ரான்ஸ்வெர்ஸ் அப்டாமினிஸ் என்னும் வயிற்று தசைகள் வலுவடையும். இப்பயிற்சி இடுப்பின் பக்கவாட்டில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவும். இடுப்பை அழகான வடிவத்துக்குக் கொண்டு வரும்.