25.9 C
Chennai
Thursday, Aug 14, 2025
strwberry facial 003
முகப் பராமரிப்பு

கரும்புள்ளிகள் முக அழகை கெடுக்கின்றனவா? இதோ ஸ்ட்ராபெரி பேஷியல்! –

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் ஆண், பெண் என இருபாலருக்கும் அழகை பாதிக்கும் ஒன்றாகும்.

நல்ல வெள்ளையாக இருப்பவர்களுக்கு கரும்புள்ளி ஏற்பட்டால், அவை அப்படியே காட்டிக்கொடுக்கும், கொஞ்சம் மாநிறம் அல்லது கருப்பாக இருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை.

அவ்வாறு கரும்புள்ளிகள் இருப்பவர்கள் பல வகை டிப்ஸ்களை மேற்கொண்டாலும், இந்த ஸ்ட்ராபெரி பேஷியலை செய்துபாருங்கள் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

* நான்கு அல்லது ஐந்து ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை ஒரு துணியால் கட்டி, அப்படியே பிழிந்து ஜூஸாக்கவும். இந்தச் சாற்றை முகமெங்கும் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.

வாரத்துக்கு மூன்று முறை இதுபோல் செய்துகொள்வதால், முகத்தில் கருமை மறைந்து, நல்ல நிறத்தைக் கொடுக்கும். சூரிய ஒளியின் புற ஊதாக் கதிரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.
strwberry facial 003

3 டேபிள் ஸ்பூன் அரைத்த ஸ்ட்ராபெர்ரி பழத்துடன், 1 டேபிள் ஸ்பூன் தேனை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் செய்ய வேண்டும். இதனால் சருமமும் நன்கு அழகாக காணப்படும்.

* ஒரு கிண்ணத்தில் அரை கப் வரும் அளவுக்கு ஸ்ட்ராபெர்ரிகளைத் துண்டுகளாக நறுக்கிப் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் புளித்த தயிரைச் சேர்த்து ந‌ன்றாக மசிக்கவும்.

இந்தக் கலவையை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த பேக், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். பருக்கள் மறைந்து பளிச்சென முகம் மாறும்.

* சருமத்துளையில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்க, அரை கப் அரைத்த ஸ்ட்ராபெர்ரியுடன் 1 டேபிள் ஸ்பூன் கார்ன் பிளாரை கலந்து, முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவும் போது, மசாஜ் செய்து கொண்டே கழுவ வேண்டும்.

இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி, சருமம் நன்கு தெளிவாக, பளிச்சென்று காணப்படும்.

Related posts

முகத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்க உதவும் சமையலறைப் பொருட்கள்!!!

nathan

முகம் ஹீரோயின் மாதிரி ஜொலிக்குமாம்!தக்காளியை இந்த 6 பொருட்களோடு சேர்த்து யூஸ் பண்ணுனீங்கனா…

nathan

முக வசீகரம் தரும் காய்கறிகள்

nathan

ஒரு சிறிய விதையில் இவ்வளவு நன்மைகளா..?

sangika

ஆண்களே நீங்க எப்பவுமே இளமையா இருக்கணுமா? இதப் படிங்க…

nathan

ஸ்கின் டானிக்

nathan

இளமையான சருமம் பெற இந்த 5 எளிய ஃபேஸியல் மாஸ்க் ட்ரை பண்ணுங்க !!

nathan

உங்க முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா?

nathan

சருமத்திற்கு குளுமை தரும் க்ரீன் டீ ஃபேஸ் பேக்

nathan