25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
24 coo
அசைவ வகைகள்

சுவையான சிக்கன் ப்ரை ரெசிபி

சிக்கன் பிரியர்களுக்காக ஒரு எளிமையான செய்முறையைக் கொண்ட சிக்கன் ப்ரை ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. குறிப்பாக இந்த ரெசிபியை பேச்சுலர்கள் முயற்சி செய்யலாம். அந்த அளவில் இதை செய்வது மிகவும் ஈஸி. அதுமட்டுமின்றி, இதில் சிக்கன் ப்ரை ரெசிபியை செய்யும் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.

அதைப் பார்த்து முயற்சித்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 250 கிராம்

தயிர் – 1 கப்

சோள மாவு – 5 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 3/4 டீஸ்பூன்

மிளகு தூள் – 3/4 டீஸ்பூன்

முட்டை – 1

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 கப்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு நீரில் சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அத்துடன் சோள மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதில் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிரட்டிக கொள்ள வேண்டும்.

ஒருவேளை சிக்கனில் தண்ணீர் அதிகம் இருந்தால், அதனைக் குறைப்பதற்கு அத்துடன் சோளமாவு சேர்த்துக் கொள்ளலாம்.

பிறகு அதனை 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள சிக்கனை சேர்த்து 8-10 நிமிடம் மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து, வெங்காயம் மற்றும் எலுமிச்சை துண்டுகளை வைத்து அலங்கரித்து பரிமாறினால், காரமான சிக்கன் ப்ரை ரெடி!!!

Related posts

சுவையான கொத்து கோழி

nathan

சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு…

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் 65

nathan

கொத்துக்கறி புலாவ்

nathan

சிவையான நாட்டுக்கோழி வறுவல்

nathan

சில்லி இறால் வறுவல் : செய்முறைகளுடன்…!

nathan

சுவையான கோபி 65 செய்வது எப்படி

nathan

சுவையான வறுத்தரைச்ச மட்டன் குழம்பு

nathan

அருமையான சேலம் ஸ்டைல் மட்டன் குழம்பு

nathan