25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
22 untitled
ஐஸ்க்ரீம் வகைகள்

சுவையான ஃபுரூட் சாலட்

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்போர் காலையில் ஃபுரூட் சாலட் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் கோடையில் உட்கொள்வது மிகவும் சிறந்தது. இதனால் உடலில் நீர்ச்சத்தின் அளவு அதிகரிப்பதுடன், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் எடையும் ஆரோக்கியமாக குறையும்.

இங்கு ஒருசில சீசன் பழங்களை சேர்த்து ஃபுரூட் சாலட் செய்யப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சாப்பிட்டு, தினத்தை ஆரோக்கியமாக ஆரம்பியுங்கள்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் – 1 (நறுக்கியது)

தர்பூசணி – 1 கப் (நறுக்கியது)

அன்னாசிப்பழம் – 1 கப் (நறுக்கியது)

மாம்பழம் – 1 (நறுக்கியது)

பப்பாளி – 1/2 (நறுக்கியது)

ஸ்ட்ராபெர்ரி – 6 (நறுக்கியது)

ப்ளாக் சால்ட் – தேவையான அளவு

தேன் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் நறுக்கிய வைத்துள்ள அனைத்து பழங்களையும் ஒன்றாக போட்டுக் கொள்ள வேண்டும்.

பின் அதன் மேல் ப்ளாக் சால்ட் தூவி, பின்பு தேனை ஊற்றி பரிமாறினால், ஃபுரூட் சாலட் ரெடி!!!

Related posts

பட்டர் புட்டிங்

nathan

வீட்டிலேயே செய்யலாம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்

nathan

கஸாட்டா ஐஸ்கிரீம் கேக்

nathan

அன்னாசிப்பழ புட்டிங்

nathan

கோக்கோ ஐஸ்கிரீம்

nathan

சோயா ஐஸ்கிரீம்

nathan

குல்பி

nathan

மாம்பழ குச்சி ஐஸ் செய்து சுவையுங்கள்!

nathan

அரிசி பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்…!

nathan