24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
tummy
மருத்துவ குறிப்பு

இதோ சில எளிய வழிகள்! இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

தட்டையான வயிற்றைப் பெற யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால் இன்றைய காலத்தில் கடைகளில் விற்கப்படும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுப் பொருட்களால், இளமையிலேயே பானை போன்று தொப்பை வர ஆரம்பித்து, திருமணம் என்று வரும் போது ‘அங்கிள்’ போன்று காட்சியளிக்க நேரிடுகிறது.

 

இப்படி கண்ட கண்ட உணவுப் பொருட்களால் வந்த தொப்பையை குறைக்க ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பதோடு, ஒருசில செயல்களை அன்றாடம் பின்பற்றி வந்தால், விரைவில் பானை போன்ற தொப்பையைக் குறைத்துவிடலாம். இங்கு இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

எலுமிச்சை ஜூஸ்
கல்லீரலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்குவது மிகவும் அவசியமானதாகும். மிகவும் அழுத்தம் அடைந்த கல்லீரலால் கொழுப்புக்களை கரைக்க முடிவதில்லை. இதனால் கொழுப்புக்களானது வயிற்றுப் பகுதியில் சேர்ந்துவிடுகின்றது. ஆனால் எலுமிச்சை சாறு சுரப்பிக்களை அதிகப்படுத்தி கல்லீரலை சுத்தம் செய்து அதன் அன்றாட வேலைகளை செய்ய உதவுகின்றது.

ஆகவே காலை எழுந்தவுடன் எலுமிச்சை ஒன்றை எடுத்து அதை வெதுவெதுப்பான தண்ணீரில் பிழிந்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை வெறும் வயிற்றில் தினசரி காலை அருந்த வேண்டும்.

குருதிநெல்லி பழச்சாறு (Cranberry Juice)

குருதிநெல்லி அல்லது கிரேன்பெர்ரி என்று கூறப்படும் பழவகையில் அதிக அளவு மேலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் கூயினிக் அமிலம் ஆகியவை செரிமானத்திற்கு உதவுகின்றது. இவை கடுமையான கொழுப்புகளையும் கரைக்க உதவுகின்றது. கல்லீரலால் கரைக்க முடியாத கொழுப்புகளை கரைத்து நிணநீர் சுரப்பிகளில் உள்ள கொழுப்பையும் கறைத்து உடம்பை சீர் செய்கின்றது. குருதிநெல்லி சாறு நிணநீர் கழிவுகளை நீக்கி கொழுப்பை கரைக்கின்றது. அதிலும் இந்த சாற்றை சர்க்கரை கலக்காமல் அருந்தினால் பெரும் வித்தியாசத்தை காண முடியும்.

காலையில் சர்க்கரை இல்லாத குருதிநெல்லி பழச்சாற்றை எடுத்து தண்ணீரில் கலந்து அருந்தலாம். எத்தனை கப் வோண்டுமானலும் ஒரு நாளைக்கு அருந்தலாம். காலை உணவிற்கு முன் அல்லது மதிய உணவிற்கு முன் மற்றும் இரவு உணவிற்கு பின் என்று எந்த நேரமாக இருந்தாலும் நாம் அருந்த முடியும். இரண்டு தேக்கரண்டி சாற்றுடன் தண்ணீரை கலந்து ஏறக்குறைய ஒரு கப் தண்ணீரில் கலந்து அருந்தலாம்.

மீன் எண்ணெய் அல்லது மீன்

மீன் எண்ணெயில் ஒமேகா-3 என்ற அமிலப்பொருள் உள்ளது. மேலும் இவற்றில் உள்ள ஈகோசாபென்டேனோயிக் அமிலம், டோக்கோசா ஹெக்சானோயிக் அமிலம் மற்றும் லினோலினிக் அமிலம் கொழுப்பை கரைக்க உதவுகின்றது. மீன் எண்ணெய் கிடைக்காவிட்டால், மீன்களை உட்கொண்டு பயனடையலாம்.

6 கிராம் அல்லது ஒரு தேக்கரண்டி அளவு மீன் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். மத்தி, சால்மன் போன்ற மீன் வகைகளில் ஒமேகா-3 அதிகமாக கிடைக்கும். இதை வாரத்திற்கு இரு முறையாவது உண்ண வேண்டும். டூனா மற்றும் ஹாலிபட் ஆகிய மீன்களிலும் இவை அதிகமாக கிடைக்கும்.

சியா விதைகள்

ஒமேகா-3 மீன்களில் மட்டுமல்ல அதே அளவு சியா விதைகளிலும் கிடைக்கும். ஒரு வேளை நீங்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பவராக இருந்தால் இந்த விதையை பயன்படுத்தலாம். தாவர வகைகளில் அதிக அளவு ஒமேகா-3 உள்ளது என்றால் அது இந்த விதையில் தான். எதை உண்டாலும் இதில் உள்ள லினோலினிக் அமிலத்தை டி.எச்.ஏ மற்றும் இ.பி.ஏ வாக மாற்றபட வேண்டியது அவசியம். இதுமட்டுமல்லாமல் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரதச்சத்து, இரும்புச்சத்து, மற்றும் நார்ச்சத்தை அதிகமாக கொண்ட இந்த விதை வகை அதிக நேரத்திற்கு வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவுகின்றது. அஸிடக் டையட் என்ற புத்தகத்தில், 4-8 தேக்கரண்டி அதாவது 30-60 கிராம் அளவில் உள்ள சியா விதைகளை பகல் நேரத்தில் உண்டால், பெருமளவில் பசியை தவிர்த்து அதிகம் சாப்பிடுவதை குறைக்க உதவுகின்றது. எப்படியானாலும் ஒரு தேக்கரண்டி சியா விதைகளை ஒவ்வொரு நாளும் எடுத்து வருவது நல்லது.

எப்படி இந்த சியா விதைகளை உண்பது?

ஜுஸ், சாலட் மற்றும் தயிருடன் சியா விதைகளை சேர்த்து சாப்பிட முடியும். காலை உணவின் போதும் இதை ஒரு சேர்கையாக சேர்த்துக் கொள்ள முடியும். சியா விதைகளை சூப் மற்றும் இதர கறிவகைகளுடன் செய்யும் பொழுது கலந்து செய்யலாம். இது சமைக்கும் உணவு பொருளை மிகுதியாக காண்பிக்க உதவும்.

இஞ்சி கலந்த தேநீர்
பொதுவாக இஞ்சி செரிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவை உடம்பில் உள்ள வெப்பத்தை அதிகப்படுத்தி கொழுப்பை கரைக்க உதவுகின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும். பொதுவாக தொப்பை வருவதற்கு அதிகமாக சாப்பிடுவது, அதிக மன அழுத்தம் மற்றும் குறைந்த உடற்பயிற்சி ஆகியவை காரணமாகும். இஞ்சியினால் இந்த பிரச்சனையிலிருந்து உங்களை சுலபமாக விடுவிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் கார்டிசோல் என்ற சுரப்பியையும் கட்டுப்படுத்த உதவுகின்றது. கார்டிசோல் சுரப்பி உடலின் ஆற்றலை மேம்படுத்தி ஒன்றுதிரட்ட உதவுகின்றது. இதற்கு இஞ்சியும் அதிக அளவில் உதவி செய்து வயிற்றுக் கொழுப்பை குறைக்க உதவுகின்றது.

இஞ்சி டீ செய்வதற்கு முதலில் இஞ்சியை கொதிக்கும் தண்ணீரில் கலந்து ஐந்து முதல் பத்து நிமிடம் வரை குறைந்த தீயில் வைக்கவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை இதில் கலந்து குடிக்கவும். அதிலும் தினமும் இரண்டு கப் இஞ்சி தேநீரை அருந்தினால் செரிமானத்தை தூண்டி, கார்டிசால் உற்பத்தியை குறைக்க உதவுகின்றது.

பூண்டு

இதயத்திற்கு மிகவும் பயன்தரக்கூடிய பூண்டு, சிஸ்டோலிக் மற்றும் டயஸ்டோலிக் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றது. இவை நல்ல கொழுப்புச் சத்துக்களை சேர்க்க உதவாமல் டிரைகிளிசரைடுகளை குறைக்கவும் செய்கின்றது. உங்களுக்கு தெரியாதது ஒன்று உண்டு! இவை பெருமளவில் உடல் எடையை குறைக்க உதவும்! அடிப்போசைட்ஸ் என்பது அடிப்போஸ் தசையை உருவாக்க உதவுகின்றது. அதாவது கொழுப்பை ஒரு போர்வை போல் இவை உருவாக்க உதவுகின்றன. இவ்வாறு ப்ரீ-அடிப்போசைட்ஸ்களை அடிப்போஸ் சதையாக உருவாக்குவதை அடிப்போஜனிசிஸ் என்று கூறுவார்கள். பூண்டு இந்த உற்பத்தியை கட்டுப்படுத்தி கொழுப்பு சேர்வதை தடுக்கின்றது. ஆகையால் உணவில் பூண்டை அதிகம் சோத்துக் கொள்வது நல்லது. ஆனால் சமைத்து சாப்பிடுவதை விட பச்சை பூண்டுக்களை அப்படியே சாப்பிடுவது மிகவும் நன்மையானதாகும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரு வயசு கூட ஆகாத குழந்தைக்கு மறந்தும் இந்த உணவுகளை கொடுத்துடாதீங்க…

nathan

எந்த வயதில் விட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்..?

nathan

எளிய இயற்கை வைத்தியம் – 50 மருத்துவ குறிப்புகள்!

nathan

கட்டாயம் புறக்கணிக்கக்கூடாத உயர் இரத்த அழுத்தத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகள்!!!

nathan

அளவுக்கு அதிகமாக சர்க்கரையை சேர்த்துக் கொள்வதால் சந்திக்கும் பிரச்சனைகள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

சுற்றுலா சுகமானதாக அமைய ஆலோசனைகள்

nathan

விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்!பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தினமும் ஒரு பேரீச்சம்பழம்!

nathan

வாழைத்தண்டு.வாழைப்பூ: மருத்துவ நன்மைகள் தெரியுமா?

nathan