இரத்த சோகை என்பது இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுவதாகும். அதாவது உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். இரத்த சோகையில் பல வகைகள் உள்ளன. அதில் பொதுவான ஒன்ற தான் இரும்புச்சத்துக் குறைபாடு. மனித உடலுக்கு இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கு இரும்புச்சத்து அவசியமான ஒன்று. எப்போது இரத்தத்தில் போதுமான இரும்புச்சத்து இல்லையோ, உடலுக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும்.
ஹீமோகுளோபின் என்பது புரோட்டீன். இது ஆக்ஸிஜனை சுமக்கும் இரத்த சிவப்பணுக்களில் இருக்கும். எப்போது இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறதோ, அப்போது ஒருசில அறிகுறிகளான மிகுந்த களைப்பு, வெளிரிய சருமம், தலைச்சுற்றல், வேகமான இதயத்துடிப்பு, நகம் நடைதல், தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். உலகில் சுமார் 50 சதவீத மக்கள் இரத்த சோகையால் கஷ்டப்படுகிறார்கள்.
இத்தகைய இரத்த சோகை குறித்து சிலருக்கு சில விஷயங்கள் தெரியாது. இக்கட்டுரையில் இரத்த சோகை குறித்து பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
#1
இரத்த சோகை என்பது இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படுவது. பலரும் போதுமான அளவில் இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களான பசலைக்கீரை, பருப்பு வகைகள், பீன்ஸ், இறைச்சி வகைகளை சாப்பிடாமல் இருந்தால், இந்நிலை ஏற்படும். ஆகவே யாரெல்லாம் இரும்புச்சத்து குறைபாட்டினால் கஷ்டப்படுகிறார்களோ, அவர்கள் இம்மாதிரியான உணவுப் பொருட்களை உட்கொண்டால், இரும்புச்சத்து குறைபாட்டில் இருந்து விடுபடலாம்.
#2
சிலருக்கு அறுவை சிகிச்சை அல்லது சிசேரியன் பிரசவத்தின் போது, அதிகளவு இரத்த வெளியேறும். இப்படி இரத்த வெளியேறும் போது, இரும்புச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும். அதோடு உடலினுள்ளே ஏற்படும் காயங்களால் இரத்த கசிவு ஏற்பட்டு, அதுவும் இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்கும்.
#3
இரும்புச்சத்து குறைபாட்டினால் இளம் குழந்தைகள் மற்றும் பெண்கள் தான், அதிகளவு பாதிக்கப்படுவார்கள். அதில் மாதவிடாய் காலத்தில் அதிகளவு இரத்தம் வெளியேறும் போது, இரத்த சோகை வரும் வாய்ப்பு அதிகரிக்கும். முதுமை காலத்தில் இரைப்பை நோய்கள் மற்றும் அல்சர் காரணமாக இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
#4
கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. ஒரு பெண் கருவை சுமக்கும் போது, பெண்ணின் உடலில் இரத்தத்தின் அளவு குறையும். அதனால் தான் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க, மருத்துவர்கள் இரும்புச்சத்து மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள்.
#5
இரத்த சோகை ஒருவருக்கு இருந்தால் வெளிப்படும் முதன்மையான அறிகுறிகளுள் ஒன்று தான் மிகுதியான களைப்பு. நீங்கள் அளவுக்கு அதிகமாக சோர்வை உணர்ந்து, எப்போதும் களைப்பாக இருந்தால், உங்களுக்கு இரத்த சோகை இருப்பதற்கான வாய்ப்புள்ளது. அத்துடன் அடிக்கடி தலைச்சுற்றுவது போன்று இருந்தாலோ, இதயத்துடிப்பு வேகமாக இருந்தாலோ, அதுவும் இரத்த சோகைக்கான இதர அறிகுறிகளாகும்.
#6
இரத்த சோகைக்கான அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனே இரத்த பரிசோதனையின் மூலம் உங்களது ஹீமோகுளோபின் அளவை சோதித்துக் கொள்ளுங்கள். உங்கள் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகிடுங்கள். மேலும் இரும்புச்சத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட ஆரம்பியுங்கள்.
#7
இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் இரும்புச்சத்து சப்ளிமென்ட்டுகளை எடுக்க வேண்டியது அவசியம். இது உடலில் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்க உதவும். ஆனால் இரும்புச்சத்து சப்ளிமென்ட்டுகளை எடுக்கும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் இரும்புச்சத்து மருந்து மாத்திரைகள் சில வகையான மருந்துகளில் இடையூறை ஏற்படுத்தக்கூடும். ஆகவே மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் எந்தவொரு இரும்புச்சத்து மருந்து மாத்திரையையும் எடுக்காதீர்கள்.
#8
இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களையும் சாப்பிட ஆரம்பியுங்கள். ஏனெனில் வைட்டமின் சி உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும். எனவே உங்கள் உடலுக்கு இரும்புச்சத்து வேண்டுமானால், தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸைக் குடியுங்கள். இதனால் இரும்புச்சத்து குறைபாடு வருவதைத் தடுக்கலாம்.
#9
இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள், பால் பொருட்களை அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதில் உள்ள கால்சியம், இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் இடையூறை உண்டாக்கும். எனவே இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள். வேண்டுமானால் இரண்டையும் வெவ்வேறு நேரங்களில் சாப்பிடுங்கள்.
#10
இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் க்ளுட்டன் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது. க்ளுட்டன் நிறைந்த உணவுப் பொருட்களான கோதுமை, பார்லி போன்றவை குடல் சுவற்றை மோசமாக பாதித்து, ஊட்டச்சத்துக்களான இரும்புச்சத்து, ஃபோலேட் போன்றவற்றை முறையாக உறிஞ்ச முடியாமல் செய்துவிடும். ஆகவே கவனமாக இருங்கள்.
#11
இரும்புச்சத்து குறைபாடு அல்லது இரத்த சோகை இருந்தால், அதை வெறும் உணவுகள் மூலம் மட்டும் சரிசெய்துவிட முடியாது. இந்நிலையில் தேவைக்கு அதிகமான அளவில் இரும்புச்சத்தை எடுக்க வேண்டியிருப்பதால், இரும்புச்சத்து மருந்து மாத்திரைகளை கட்டாயம் எடுக்க வேண்டியிருக்கும். ஆகவே உங்களுக்கு இரத்த சோகை இருப்பது போன்று உணர்ந்தால், மருத்துவரிடம் உடனே சென்று உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
#12
போதுமான அளவு இரத்த சிவப்பணுக்கள் இல்லாதவர்கள் இரத்த சோகை உள்ளவர்களாவர். ஆனால் இதற்கு இரும்புச்சத்து குறைபாடு மட்டும் காரணமல்ல. ஒருவரது உடலில் ஃபோலேட் குறைபாடு அல்லது வைட்டமின் பி12 குறைபாடு இருந்தாலும், இரத்த சோகை ஏற்படும். இரத்த சிவப்பணுக்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உடைந்தால், புதிய இரத்த சிவப்பணுக்களின் அளவு குறைவாகி, அதன் விளைவாக இரத்த சோகையை உண்டாக்கும்.
#13
பலரும் இரத்த சோகை என்பது நோயாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு குறைபாடு அல்லது கோளாறு. எலும்பு மஜ்ஜையில் தான் சரியான அளவில் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. எப்போது உடலில் வைட்டமின்கள் அல்லது கனிமச்சத்துக்கள் போதுமான அளவில் இல்லையோ, அப்போது இரத்த சிவப்பணுக்கள் பலவீனமாகி, விரைவிலேயே இறக்க ஆரம்பிக்கும் அல்லத எலும்பு மஜ்ஜையில் போதுமான அளவில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போகும்.
#14
பெரும்பாலும் இரத்த சோகையை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது என்பது கடினம். ஏனெனில் இதற்கான ஆரம்ப அறிகுறி அன்றாடம் நாம் சந்திக்கும் ஓர் பிரச்சனையாக இருப்பதால், பலரும் சாதாரணமாக நினைத்துவிட்டு விடுவோம். உடல் சோர்வு மிகுதியாக இருக்கும் போது தான், நமக்குள்ளேயே உடலில் பிரச்சனை இருப்பதை உணர ஆரம்பிப்போம். அதுவரை இரத்த சோகையை பலரும் கண்டு கொள்ளாமல் தான் இருப்போம்.
#15
பல்வேறு மோசமான நோய்களும் இரத்த சோகையை உண்டாக்கும். அதில் மாரடைப்பில் இருந்து மீண்டவர்கள், புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பை சரிசெய்தவர்கள் போன்றோருக்கு இரத்த சோகை வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.