இன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் ஒழுங்கற்ற மாதவிடாய் (Irregular periods) பிரச்சனை இருக்கிறது.
இதற்கு வாழ்க்கை முறையில் மாற்றம், ஒழுங்கற்ற உணவு பழக்கங்கள் போன்று பல காரணங்கள் உள்ளது. இதை சாப்பிடலாம்.
இதுபோன்ற ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் வருவதை அதிகமாக இருப்பதை பார்க்கிறோம்.
இதனை தடுக்க மாத்திரைகளை தான் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சில உணவுகள் மூலம் கூட சரி செய்யலாம். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
சீரகத்தை இரண்டு தேக்கரண்டி எடுத்து ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் இந்த பாணத்தை பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் வடிகட்டி அப்படியே அருந்த வேண்டும். இந்த மாதவிடாய் பிரச்சனையில் இருந்து விடுபட ஒவ்வொரு நாளும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
மாதவிடாய் சரியாக வருவதற்கு எள்ளுருண்டை சாப்பிடலாம். அதிலும், கருப்பு எள்ளுருண்டை மிகவும் நல்லது. இதில் இருக்கும் நல்ல கொழுப்பு, கால்சியம், மெக்னீஷியம் போன்றவை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்கவும், எலும்பை உறுதி செய்யவும் பயன்படும். மேலும், இது உடல் எடையையும் சரி செய்யும்.
சிலருக்கு பீரியட்ஸ் 3 அல்லது 4 நாட்கள் வரும். அப்போது அவர்களுக்கு அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படும். அதிலும் சிலருக்கு கட்டிக்கட்டியாக இரத்த போக்கு ஏற்படும். அந்த சமயத்தில் வாழைப்பூவை வறுத்து தயிருடன் சேர்த்து சாப்பிடலாம்.
பொட்டுக்கடலையை நெய்யுடன் வறுத்து அதனுடன் உலர்திராட்சையை கலந்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதினால் அதிகப்படியான உதிரப்போக்கு போன்ற மாதவிடாய் பிரச்சனை சரிசெய்துவிட முடியும்.
சிலருக்கு மாதவிடாய் சரியாக வரும். ஆனால், சரியான பீரியட்ஸ் இருக்காது. இதனைத் தவிர்க்க மற்றும் மாதவிடாய் சரியாக வர இரும்புச் சத்து அதிகமான உணவைச் சாப்பிட வேண்டும்.
பேரீச்சை, உலர்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, கருவேப்பிலை ஜூஸ், அகத்திக்கீரை, சுண்டக்காய் ஆகியவற்றை உண்பதன் மூலம் இதனைச் சரி செய்யலாம்.