1444115568 3505
சட்னி வகைகள்

சுவையான கேரட் சட்னி

காலையில் சாப்பிடும் இட்லி, தோசைக்கு ஒரே சாம்பார் ஒரே சட்னி சாப்பிட்டு அலுத்துக்கொள்ளும் நபர்களுக்கு இந்த கேரட் சட்னி நிச்சயம் கண்டிப்பாக அலுப்பை போக்கி வித்தியாசமான சுவையை கொடுக்கும்.

தேவையானப் பொருட்கள்

* கேரட் – 3
* பூண்டு – 7 பல்
* காய்ந்த மிளகாய் – 5
* வெங்காயம் – 3
* எண்ணெய் – தேவையான அளவு
* இஞ்சி – சிறிது
* கொத்தமல்லி – சிறிது
* உப்பு – தேவையான அளவு

செய்முறை

* முதலில் பூண்டு, காய்ந்த‌ மிளகாய், வெங்காயம் முதலியவற்றை வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கவும்.

* அவற்றுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய கேரட்டை சேர்க்கவும்.

* கேரட் வதங்கியதும் கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.

* ஆறியவுடன் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

* நன்கு அரைத்த இந்த கேரட் சட்னியை இப்பொழுது இட்லியுடன் சேர்த்து பரிமாறலாம்.

* தேவைப்பட்டால் இதனுடன் தாளிப்பு சேர்க்கலாம்.

* இந்த கேரட் சாட்னி வித்தியாசமான சுவையை அளித்து வழக்கமான சட்னிக்கு மற்றாக அமையும்.
1444115568 3505

Related posts

சுவையான பசலைக்கீரை ரெய்தா

nathan

பச்சை மிளகாய் வெங்காய சட்னி

nathan

தக்காளி – பூண்டு சட்னி

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் வெப்பத்தை தணிக்கும் மாங்காய் புதினா சட்னி

nathan

லெமன் சட்னி

nathan

கத்தரிக்காய் சட்னி

nathan

சுவையான கடலைப்பருப்பு சட்னி

nathan

அஜீரணத்தைப் போக்கும் இஞ்சி – பூண்டு சட்னி

nathan

தக்காளி துளசி சட்னி

nathan