எண்ணெய் பசை நிறைந்த சருமம் கொண்டுள்ளதால் வருந்துகிறீர்களா? உண்மையில் எண்ணெய்ப்பசை நிறைந்த சருமம் கொண்டுள்ளதில் நிறைய பயன்கள் இருக்கின்றன. பொதுவாக பலர் எண்ணெய் பசை உள்ள சருமம் மிக சிரமம் தரும் என கூறுவார்கள். அப்படியல்ல நிறைய பயன்களும் தரும். எண்ணெய் பசையுள்ள சருமமத்தில் முகப்பருப்பிளவு அதிகம் ஏற்படாது.
எண்ணெய் பசை சருமம் கொண்டுள்ளவர்களுக்கு சருமத்தில் வறட்சி ஏற்படாது. மற்றும் பொதுவாகவே எண்ணெய் பசை உள்ளவர்களுக்கு எந்த காலநிலைகளிலும் முகம் பொலிவுற திகழும். இயற்கையாகவே அவர்கள் முகப்பொலிவு கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் எண்ணெய்பசை சருமம் மூலம் நீங்கள் பெறும் பயன்களை அறிய தொடர்ந்து படிக்கவும்…
இயற்கையான முகப்பொலிவு
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களா நீங்கள்… அப்போது இயற்கையிலேயே பொலிவுறும் சருமம் பெற்று ஆசிர்வதிக்க பெற்றவர்கள் நீங்கள். எந்த ஒரு இரசாயன பூச்சுகளின் உதவியையும் நீங்கள் நாட தேவையே இல்லை.
என்றும் இளமை
எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் எப்போதும் இளமையாகவே தோற்றமளிப்பார்கள். அதனால் நீங்கள் உங்களது வயதைப் பற்றி கவலையடையவே வேண்டாம்.
கிரீம் தேவையில்லை
சாதாரண மற்றும் சரும வறட்சி உள்ளவர்களுக்கு காலநிலை மாறும் போது அவர்களது சரும நிலையம் மாறும். அதனால் அவர்களுக்கு சருமத்தை பாதுகாக்க கிரீமின் உதவி கட்டாயம் தேவை. ஆனால் எண்ணெய் பசை உள்ளவர்களுக்கு அவையெல்லாம் தேவையே இல்லை.
மேக்-கப் செய்ய ஏற்ற சருமம்
மேக்-கப் செய்யும் போது அதற்கு முன் அது அதிக நேரம் நிலைத்து இருக்க ஆயில் படிமம் இட வேண்டும். ஆனால் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு அது தேவையே இல்லை மேக்கப் வல்லுனர்களும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மேக்-கப் செய்யவே அதிகம் விரும்புவர்.
முக சுருக்கங்களை மறைக்கும்
எண்ணெய் பசை சருமம் உள்ளதால், நீங்கள் அடையும் இன்னொரு பயன், உங்களது முக சுருக்கங்களை இது மறைத்துவிடும். உங்களது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை நிரம்பியிருந்தால், தினமும் அதிக அளவு தண்ணீர் பருகுங்கள். இது எண்ணெய் பசை மிகுதியை கட்டுப்படுத்தும்.