தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு, கம்பு, ராகி, கொண்டைக்கடலை – தலா ஒரு கப்,
கோதுமை மாவு – கால் கிலோ,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும். முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
• கோதுமை மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.
• மாவை சிறு கிண்ணம் போல் உருட்டி அதில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, சப்பாத்திக் கல்லில் மெதுவாக உருட்டவும்.
• தேய்த்த சப்பாத்திகளை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும்.
குறிப்பு:
முளைகட்டிய தானியங்களில் அனைத்துச் சத்துக்களும் ஒருங்கே கிடைக்கும். இதனை காலை, இரவு நேர டிபனாக அடிக்கடி சாப்பிட்டு வர. சத்துக்குறைபாடுகள் நீங்கி, உற்சாகமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.