26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
age
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் ! மாதவிடாய் நிறுத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்கள்!!!

மாதவிடாய் நிற்கப்போகும் காலத்தில் உங்களுக்கு அச்சுறுத்தல் உண்டாகும். ஏன் மாதவிடாய் நிறுத்தத்தால் நீங்கள் பெண்ணே இல்லாமல் மாறி போவீர்களா போன்ற சந்தேகங்கள் எல்லாம் மூக்கை நுழைக்கும். அதுமட்டுமின்றி உங்கள் வாழ்க்கையின் சிறந்த தருணங்கள் எல்லாம் முடிந்து விட்டதோ என்ற எண்ணமும் தோன்றும்.

மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு சராசரியான பெண்கள் துடிப்பான ஆரோக்கியத்துடனே இருக்கிறார்கள். அதன் பின் கர்ப்பம் தரிப்பது என்பது நடக்காத காரியமாகும். அதேப்போல் வாழ்க்கையின் இந்த கட்டத்திற்குப் பிறகு இனி மாதவிடாயும் ஏற்பட போவதில்லை.

இதில் சில உபாதைகள் ஏற்பட போவதும் உறுதி. அதில் சில சற்று பெரிய தொந்தரவுகளாக இருக்கும். மாதவிடாய் நிற்கப்போகும் காலத்திலேயே இந்த உபாதைகள் வர தொடங்கிவிடும்.

ஆனால் சரிவு என்பது பெரிய சக்தியாகும். இது பல நேரங்களில் நமக்கு உதவிடும். மாதவிடாய் நிறுத்தம் பற்றி பலருக்கும் தெரியாத சில தகவல்கள், இதோ!

ஹாட் ஃப்ளாஷ்

மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறி ஏற்படும் போது முதலில் ஏற்பட போவது ஹாட் ஃப்ளாஷ் தான். ஆனால் மூளையின் அடிப்பகுதியில் ஏற்படும் மாற்றத்தினால் கூட உங்களுக்கு ஹாட் ஃப்ளாஷ் உண்டாகும். இது பலருக்கும் தெரிவதில்லை. மூளையின் அடிப்பகுதி தான் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்துகிறது.

நீங்கள் வெப்பத்துடன் இருப்பதை காணும் மூளையின் அடிப்பகுதி, உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சருமத்தின் மேற்பரப்பு வரை இரத்த ஓட்டம் இருப்பதால், இரத்தத்தை குழாய்கள் தளர்வடைவது அதிகரிக்கும். ஹாட் ஃப்ளாஷ் உடன் சேர்ந்து முகமும், கழுத்தும் சிவந்து போவதும் ஒரு விளைவாகும். உங்களுக்கு வியர்க்க தொடங்கும்; இது உங்களை குளிர்விக்க உடலின் ஒரு வழிவகையாகும். இதனால் ஹாட் ஃப்ளாஷிற்கு பிறகு உடல் உறைந்து போகும். மொத்தத்தில் சங்கடமான நிலையை ஏற்படுத்தும்.

தலைவலிகள்

ஹார்மோன் மாற்றங்களால் இதற்கு முன் இல்லாத அளவில் தலை வலி இருக்கும். மாதவிடாய் ஏற்படும் போது அல்லது வாய்வழி கருத்தடை எடுத்துக் கொள்ளும் போது பொதுவாக உங்களுக்கு தலைவலிகள் இருந்தால், இந்த தாக்கம் உங்களுக்கு அதிகமாக இருக்கும்.

இதில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், மாதவிடாய் நிறுத்தத்தை எட்டியவுடன் ஹார்மோன் அளவுகள் சீராக இருக்கும். இதனால் தலைவலிகள் ஏற்படுவது குறைந்துவிடும்.

மாதவிடாய் நிறுத்தம் உங்கள் தூக்கத்தை கெடுக்கும்

மாதவிடாய் நிறுத்தத்தின் போது உங்கள் தூக்கம் பாதிக்கப்படும். இதற்கு ஒரு காரணமாக இரவில் ஏற்படும் ஹாட் ஃப்ளாஷை கூறலாம். என்ன காரணமாக இருந்தாலும் சரி, ஆரோக்கியமான தூக்கத்தை மேம்படுத்த முயற்சி செய்வது அவசியம். உதாரணத்திற்கு, சீரான நேரத்தில் தூங்குவது, தூங்க செல்லும் முன் தொலைக்காட்சி பார்க்காமல் இருத்தல் அல்லது உணவருந்தாமல் இருத்தல்.

இது போதிய பலனை அளிக்கவில்லை என்றால் அலர்ஜிகள், தைராய்டு பிரச்சனைகள், தூக்க மூச்சுத் திணறல் அல்லது இதர சாத்திய காரணங்களாக இருக்கலாம். இரவில் நல்ல தூக்கத்தை பெறுவதற்கு தியானம் மற்றும் யோகா போன்றவற்றை செய்யலாம்.

மூளை பனிமூட்டமாகும்

ஞாபகப்படுத்தி பார்க்கும் திறனிலும், தெளிவாக யோசிப்பதிலும், உங்களுக்கு பிரச்சனை ஏற்படலாம். இது தூக்கமின்மையால் அல்லது தூக்கம் களைவதால் கூட இருக்கலாம். மேலும் இரவு நேரத்தில் வியர்க்கும் பிரச்சனையான ஹாட் ஃப்ளாஷ் ஏற்பட்டாலும் இந்த பிரச்சனை ஏற்படும்.

உணர்ச்சி ரீதியான ஏற்ற இறக்கம் இருக்கும்

உங்களுக்கு மன அழுத்தம், கோபம் அல்லது அழுகை ஏற்படலாம். இதற்கு முன் இல்லாத அளவிற்கு உங்கள் மனநிலையில் பெரியளவில் ஏற்ற இறக்கம் இருக்கும். கருப்பையில் ஹார்மோன் அளவுகள் குறைவதால், மனநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது என கருதப்படுகிறது. போதிய தூக்கம் இல்லாமல் போவதாலும், இரவில் வியர்த்து கொட்டுவதாலும் கூட உங்கள் மனநிலை பாதிக்கப்படும்.

பெண்ணுறுப்பில் வறண்டு போவது

வறட்சி மற்றும் இதர பிரச்சனைகளான அரிப்பு, வெள்ளைக் கழிவு, வலி அல்லது எரிச்சல் போன்றவைகளை நீங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும். இவையெல்லாம் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதால் ஏற்படும்.

பாலுணர்ச்சி தூண்டுதலில் தடை

உடலுறவின் மீதான நாட்டம் சுத்தமாக இல்லாமல் போகலாம். ஆனால் இப்படியும் நடக்கலாம்; உடலுறவின் மீதான உங்கள் நாட்டம் எப்போதும் இல்லாத அளவிற்கு மீட்டெழுச்சி பெறலாம்.

சங்கடத்தை ஏற்படுத்தும் கசிவு

உங்களுக்கு சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத பிரச்சனை ஏற்படலாம். அதாவது உங்களை அறியாமலேயே சிறுநீர் கசிவு ஏற்படலாம். ஈஸ்ட்ரோஜென் குறைவதால் சிறுநீர் வடிகுழாயின் உட்பூச்சு சன்னமாக மாறும். இதனால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

சரும மாற்றும்

உங்கள் சருமம் தளர்வடைந்து சுருக்கங்களை பெறலாம். முன்பு இல்லாததை போல் அதிக வறட்சியை அடையும். சரும அடர்த்தி மற்றும் கொலாஜென் இழப்பிற்கும் குறைவான ஈஸ்ட்ரோஜென் காரணமாக அமைகிறது.

கூந்தலின் அடர்த்தி குறையும்

உங்கள் கூந்தலின் அடர்த்தி குறையலாம் அல்லது தேவையற்ற இடத்தில் எல்லாம் முடியின் வளர்ச்சி இருக்கும். முக்கியமாக மேல் உதடு அல்லது நாடி போன்ற இடங்களில் முடியின் வளர்ச்சி இருக்கும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…விலகிப் போன முதுகெலும்பில் டிஸ்க் தொந்தரவு உள்ளவர்களுக்கு பயனுள்ள ஆசனம்!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆயுர்வேத முறைப்படி நீர் அருந்துவதற்கான சரியான வழிமுறை!!!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! குறைப்பிரசவம் நடக்க காரணமென்ன?

nathan

சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்

nathan

ஒவ்வாமைப் பரிசோதனைகள்

nathan

ஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் – அதிர்ச்சி தகவல்… !

nathan

உங்களுக்கு தெரியுமா எவ்வளவு வலி இருந்தாலும் இந்த மூலிகை இருந்தா போதும்…

nathan

கீரை டிப்ஸ்..

nathan

கருத்த‍டை மாத்திரைகள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் பழக்க‍ம் வழக்கம் ஆக்கி கொண்டீர்களா?

sangika