23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
threading 002
கண்கள் பராமரிப்பு

கண் புருவம் அழகாக.

பெண்களுக்கு இமை அழகு என்பது முக்கியம், ஏனெனில் அவர்களின் முகத்தினை இன்னும் கொஞ்சம் அழகாக காட்டும்.

மேலும், புருவத்தினை த்ரெடிங் செய்யும் போது, மெல்லியதாக செய்வதை விட கொஞ்சம் முடிகள் இருக்கும் வண்ணம் த்ரெடிங் செய்வது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

எவ்வாறு த்ரெடிங் செய்யலாம்?

த்ரெட்டிங் செய்யும் முன், முகத்தை நீரினால் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும், குறிப்பாக சுடுநீரைப் பயன்படுத்துவது நல்லது.

ஏனெனில் சுடுநீர் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கிவிடும்.

முகத்தை நீரில் கழுவியப் பின், சுத்தமான காட்டன் துணியால் முகத்தைத் துடைக்காமல், ஒற்றி எடுக்க வேண்டும்.

ஏனெனில் துடைத்தால், சருமம் பாதிக்கப்படக்கூடும் பின் இயற்கையான டோனரைக்(Donar) கொண்டு முகத்தைத் துடைக்க வேண்டும்.

அதிலும் கற்றாழை ஜெல் கொண்டு துடைத்து, உலர விடுங்கள். அதன் பின் அழகுக்கலை நிபுணரை த்ரெட்டிங் செய்ய அனுமதியுங்கள்.

த்ரெட்டிங் செய்து முடித்த பின், மீண்டும் டோனரை தடவி, ஒரு ஐஸ் கட்டியால் அவ்விடத்தை ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

இதனால் முகத்தில் பருக்கள் வருவது தடுக்கப்படும்.

ஒருவேளை உங்களுக்கு முகம் கழுவ வேண்டுமென்பது போல் தோன்றினால், ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துங்கள்.

இதனால் த்ரெட்டிங் மூலம் ஏற்பட்ட காயங்கள் மற்றும் பிம்பிள் வருவது தடுக்கப்படும்.

த்ரெட்டிங் செய்து முடித்த பின் 6 மணிநேரத்திற்கு அவ்விடத்தைத் தொடக்கூடாது. அதேப்போல் கண்ட க்ரீம்களையும் பயன்படுத்தக்கூடாது.

அதுமட்டுமின்றி, குறைந்தது 12 மணிநேரத்திற்கு ஸ்கரப் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
threading 002

Related posts

கண்களுக்கு மேக்கப் போடுவது எப்படி?

nathan

முகத்தின் பொலிவைக் கெடுக்கும் கருவளையம்!…

sangika

கருவளையத்தை போக்கும் உருளைக்கிழங்கு

nathan

கண்களில் சுருக்கங்களை போக்கும் பெஸ்ட் ரெசிப்பிஸ் !!

nathan

கண்களுக்கு கீழ் காணப்படும் சுருக்கங்கள் இளம் வயதிலேயே எதனால் வருகிறது

nathan

முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்ய சில டிப்ஸ்!…

sangika

அடர்த்தியான புருவங்களை பெற சில டிப்ஸ்

nathan

கருவளையம் மறைய..

nathan

கண்களுக்கான அழகு சாதனங்கள்

nathan