25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
3 facemask
முகப் பராமரிப்பு

தெரிந்துகொள்ளுங்கள் ! மூக்கைச் சுற்றி வரும் சொரசொரப்பான வெள்ளைப்புள்ளிகளை நீக்க உதவும் ஃபேஸ் பேக்குகள்!!!

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றான வெள்ளைப்புள்ளிகள் எண்ணெய் பசை சருமத்தினரும், சாதாரண சருமத்தினரும் சந்திக்கக்கூடிய ஒன்று. இந்த வெள்ளைப்புள்ளிகள் மூக்கின் மேல் மற்றும் அதனை சுற்றியும், தாடையிலும் தான் அதிகம் வரும். இதனை தினமும் ஸ்கரப் செய்து வருவதன் மூலம் சரிசெய்யலாம். மேலும் அவ்வவ்போது முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வருவதன் மூலமும் போக்கலாம்.

இங்கு முகத்தில் ஏற்படும் வெள்ளைப்புள்ளிகளைப் போக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை பின்பற்றி முகத்தை மென்மையோடும் பொலிவோடும் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆரஞ்சு தோல், கடலை மாவு மற்றும் தேன் ஃபேஸ் பேக்

ஆரஞ்சு தோலை வெயிலில் போட்டு உலர்த்தி, அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் அதனைப் போட்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 3 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி பின் 15 நிமிடம் உலரச் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால், முகம் புத்துணர்ச்சியுடனும், வெள்ளைப்புள்ளிகளின்றியும் இருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் தக்காளி பேக்

3-4 ஸ்ட்ராபெர்ரி பழங்களை அரைத்து, அதில் சிறிது தக்காளி பேஸ்ட் சேர்த்து ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கபவ வேண்டும்.

முல்தானி மெட்டி மற்றும் சந்தனப் பொடி ஃபேஸ் பேக்

2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியில், 2 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடி சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

பாதாம் மற்றும் தேன் ஃபேஸ் பேக்

ஒரு கையளவு பாதாமை பேஸ்ட் செய்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, அத்துடன் 1/2 எலுமிச்சையை பிழிந்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள வெள்ளைப்புள்ளிகள் அகலும்.

ஆப்பிள் மற்றும் தேன் ஃபேஸ் பேக்

ஆப்பிளை அரைத்து, அதில் 3 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! மின்னும் முகப்பொலிவை வீட்டிலிருந்தப்படியே பெற சில பேஷியல் டிப்ஸ்!

nathan

முக அழகுக்கு ஆதாரம்-ஆவாரம்..

nathan

சருமத்தின் கரும்புள்ளிகளை நீக்கும் பேக்கிங் சோடா

nathan

புருவம் அடர்த்தியாக வளர எளிய டிப்ஸ்

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! பரு வந்த இடத்துல கருப்பா தழும்பு மட்டும் போகவே மாட்டேங்குதா?

nathan

மாதுளை எப்படி உங்கள் சருமத்திற்கு அட்டகாசமான இளமையை தரும் தெரியுமா?

nathan

முக சுருக்கம் வருவதை தடுக்கும் மாம்பழ பேஸ் பேக்

nathan

சரும பொலிவை ஜொலிக்கச் செய்யும் மிகச் சிறந்த ஃபேஸ் மாஸ்க் தெரியுமா?இதை படிங்க…

nathan

முகம் பளபளக்க/ Kasthuri Manjal

nathan