28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
16 1444969911 4 vomiting
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு அல்சர் தீவிரமாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!!

வயிறு மற்றும் சிறு குடல் சுவர்களில் ஏற்படும் புண்கள் தான் அல்சர். அல்சரானது சரியாக சாப்பிடாமல், வயிற்றில் உணவைச் செரிக்க சுரக்கப்படும் அமிலமானது வயிற்றை அரிப்பதால் புண்கள் ஏற்படும். அல்சரை ஆரம்பத்திலேயே சரிசெய்து விட்டால், எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் அதையே கவனிக்காமல் விட்டுவிட்டால், அதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அளவில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

சிலருக்கு அல்சரானது அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் அருந்துவது, பைலோரி தொற்றுகள், புகைப்பிடித்தல், ஒருசில மருந்துகளினால் ஏற்படும். அல்சர் ஒருவருக்கு இருந்தால், அவர் மிகுந்த வலியை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே அல்சர் இருந்தால் என்ன அறிகுறிகள் தென்படும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அதிலும் இன்றைய காலத்தில் பலர் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால், அல்சரால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். சரி, இப்போது அல்சர் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.

அடிவயிற்று வலி

அல்சர் இருந்தால், அடிவயிற்றில் கடுமையான வலியை சந்திக்க வேண்டியிருக்கும். இதற்கு காரணம் வயிற்றில் அதிகப்படியான அமிலம் இருப்பது தான். இந்த அமிலம் தான் புண்ணை ஏற்படுத்தி, வலி மற்றும் அசௌகரியத்தை உருவாக்குகிறது.

குமட்டல்

வயிற்றில் உணவை செரிக்கும் அமிலத்தின் ஏற்றத்தாழ்வுகள் அடிக்கடி குமட்டலை உருவாக்கும். எனவே உங்களுக்கு அல்சர் உள்ளது என்பதை குமட்டலின் மூலமும் அறியலாம்.

திடீர் எடை குறைவு

உங்களின் எடை திடீரென்று குறைந்தால், அதற்கு முக்கியமான காரணங்களில் அல்சரும் ஒன்று. எனவே மருத்துவரை பரிசோதித்து முறையான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

இரத்த வாந்தி

சில நேரங்களில் இரத்த வாந்தி கூட எடுக்க நேரிடும். குறிப்பாக உங்கள் வயிற்றில் புண் அதிகம் இருந்தால், இரத்தக் கசிவு ஏற்பட்டு, அதனால் இரத்த வாந்தி எடுக்கக்கூடும்.

ஏப்பம்

உங்களுக்கு ஏப்பம் ஒருவித புளிப்புத்தன்மையுடன் வந்தால், அதற்கு முக்கிய காரணமாக இருப்பது அல்சர். எனவே மேற்கூறிய அறிகுறிகளுடன் ஏப்பமும் வந்தால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

வயிற்று உப்புசம்

சரியாக சாப்பிடாமலேயே, வயிறு நிறைந்துவிட்டது போல் உப்புசத்துடன் இருந்தால், அதுவும் அல்சருக்கான அறிகுறிகளுள் ஒன்று. எனவே வயிறு உப்புசமாக இருந்தால், சாதாரணமாக நினைக்காமல், உங்கள் மருத்துவரிடம் சொல்லி உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

கருப்பு நிற மலம்

உங்கள் மலம் கருப்பு நிறத்தில் வெளிவந்தால், உங்களுக்கு அல்சர் முற்றிவிட்டது என்று அர்த்தம். எனவே இந்நிலையில் தாமதிக்காமல் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.16 1444969911 4 vomiting

Related posts

இதோ மாதவிடாய் காலத்தில் கட்டாயம் செய்யக்கூடாத செயல்கள்! இத படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க… மாதவிடாய் இரத்த போக்கின் நிறத்தை வைத்து உங்களின் ஆரோக்கியத்தை அறியலாம்!!

nathan

சர்க்கரை நோயால் வீக்கம் அடையும் கால்களுக்கான அற்புதமான எளிய தீர்வு

nathan

உடலில் தேங்கியுள்ள கெட்ட நீரை வெளியேற்றி வீக்கங்களை போக்க நாட்டு வைத்தியங்கள்.இதை படிங்க…

nathan

நண்பர்கள் முதல் நல்ல வேலை அமைவது வரை இது முக்கியம் ப்ரோ…

nathan

தனிமை விரும்பியா நீங்கள்?

nathan

ஓர் ஆணிடம் பெண்கள் எதிர்பார்க்கும் இந்த 8-ல், உங்களிடம் எத்தனை இருக்கிறது?

nathan

ஆண்களே! மாரடைப்பு ஏற்படப்போவதை சில அறிகுறிகளை வைத்து கணக்கிடலாம்.

nathan

எதனால் ஏற்படுகிறது?..!! சினைப்பை புற்றுநோய்க்கான அறிகுறி என்ன?..

nathan