25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
facepacks
சரும பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா முல்தானி மெட்டியால் கிடைக்கும் 10 அழகு நன்மைகள்!!!

முல்தானி மெட்டி என்பது சருமத்திற்கு அழகை உண்டாகும் ஒரு ஒப்பனை பொருள் என்பது பலரும் அறிந்ததே. அழகு தொழில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது இது. முல்தானி மெட்டி சருமத்தை சுத்தப்படுத்தி, தெளிவடையச் செய்யும். இது ஒரு வகை களிமண் ஆகும். முல்தானி மெட்டியில் மக்னீசியம், குவார்ட்ஸ், சிலிகா, இரும்பு, கால்சியம், கால்சைட் மற்றும் டாலமைட் உட்பட பல்வேறு கனிமங்கள் அடங்கி உள்ளது. இது சருமத்தில் உள்ள பருக்களையும், கசடுகளையும் நீக்கும்.

முல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர். முல்தானி மெட்டியானது, மாவு போல பிசையப் பட்டு நேரடியாக முகத்தில் தடவப்படுகிறது. இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது. இது பவுடர் வடிவில் கிடைக்கும். இதுப்போக வெள்ளை, பச்சை, பழுப்பு மற்றும் ஆலிவ் என பல்வேறு வண்ணங்களிலும் கிடைக்கிறது.

நம் முடி மற்றும் சரும பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்திட இயற்கை இந்த அதிசய பொருளை நமக்கு வழங்கியுள்ளது. அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சும், சுத்தப்படுத்தும் மற்றும் கிருமிநாசினி குணங்களை இது கொண்டுள்ளதால், பல்வேறு முடி மற்றும் சரும நிலைகளை குணப்படுத்த உதவிடும். சிக்கனமான இந்த இயற்கை பொருள் பயன்படுத்த பாதுகாப்பானது. இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. இந்த முல்தானி மெட்டியால் கிடைக்கும் 10 அழகு நன்மைகளைப் பற்றி பார்க்கலாமா?

சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய்யை உறிஞ்சிடும்

இயற்கையாக உறிஞ்சக்கூடிய தன்மையை கொண்டுள்ளதால், சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய்யை நீக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தலாம். சரும துவாரங்களின் அடைப்பை நீக்கி, சருமத்தின் இயற்கையான pH அளவை சமநிலைப்படுத்தும். இது பொதுவாக வீட்டில் செய்யப்படும் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தப்படுகிறது.

1. முல்தானி மெட்டி, பன்னீர் மற்றும் சந்தன பொடியை சரிசமமான அளவில் கலந்திடவும்.

2. இந்த கலவையை முகத்தின் மீது ஃபேஸ் பேக்காக தடவவும்.

3. இயற்கையாக அது காயட்டும். பின் வெதுவெதுப்பான நீரை கொண்டு முகத்தை கழுவிடுங்கள்.

4. எண்ணெய் சருமம் என்றால் இதனை தினமும் தொடரவும். மிதமான எண்ணெய் சருமம் என்றால் வாரத்திற்கு 2-3 முறை செய்யவும்.

தழும்புகளை நீக்கும்

புண்களால் ஏற்பட்டுள்ள தழும்புகள், சிறிய தீப்புண் அடையாளங்கள் அல்லது இதர தழும்பு வகைகளை பெரிய அளவில் குறைக்க முல்தானி மெட்டி உதவும்.

1. முல்தானி மெட்டி, காரட் பல்ப் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை சரிசமமான அளவில் கலந்திடவும்.

2. இந்த கலவையை தழும்பு உள்ள இடத்தில் தடவுங்கள்.

3. 20 நிமிடங்கள் அதை அப்படியே விட்டு விட்டு, பின்பு கழுவிடுங்கள்.

4. இதனை வாரம் ஒரு முறை அல்லது மூன்று முறை செய்து வந்தால் தழும்புகள் மெல்ல நீங்கும்.

சரும நிறம் மேம்படும்

முல்தானி மெட்டி சிறந்த சுத்தப்படுத்தும் பொருளாக செயல்ப்சுவதால், சரும நிறம் மேம்படும்.

1. 2 டீஸ்பூன் முல்தானி மெட்டியை தயிருடன் கலந்து கொள்ளவும்.

2. இந்த கலவையை 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள்.

3. அதனுடம் 1 டேச்ச்பூன் புதினா பொடியை சேர்த்து, அதனை நன்றாக கலந்திடவும்.

4. இந்த கலவையை உங்கள் முகத்திலும் கழுத்து பகுதிகளும் தடவவும்.

5. 20-30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விடுங்கள்.

6. இதனை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், உங்கள் சருமத்தின் நிறம் மேம்படும்.

இந்த பேஸ்ட்டை கைகளிலும் கால்களிலும் கூட அதன் நிறத்தை மேம்படுத்த பயன்படுத்தலாம். சூரிய ஒளியால் சருமத்தின் நிறம் கருப்பதற்கும் இது சிகிச்சையாக விளங்கும்.

பருக்களை குணப்படுத்தும்

பருக்களால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் பிரச்சனைகளுக்கு உறுதியாக தீர்வளிக்க வந்து விட்டது முல்தானி மெட்டி. பருக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் துவாரங்களை அடைப்பை நீக்கவும், அதிகமான எண்ணெய் சுரப்பை குறைக்கவும் இது உதவுகிறது.

1. 2 டீஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் வேப்ப இல்லை பேஸ்ட், 1 சிட்டிகை சூடம் மற்றும் போதிய பன்னீரை கலந்து, அடர்த்தியான பேஸ்ட் ஒன்றை தயார் செய்யுங்கள்.

2. இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும்.

3. 15 நிமிடங்கள் கழித்து, சாதாரண தண்ணீரில் கழுவிடவும்.

4. மென்மையான துண்டை கொண்டு சருமத்தை துடைத்திடுங்கள். பின் மிதமான மாயிஸ்சரைஸர் ஒன்றை தடவிடுங்கள்.

5. இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை செய்து வந்தால் பருக்கள் இல்லாமல் இருக்கலாம்.

சரும சுருக்கம் நீங்கும்

வயது ஏறும் போது, தொங்கிய மற்றும் தொய்வடைந்த சருமத்தை நீங்கள் பெறுவீர்கள். முல்தானி மெட்டி சருமத்தின் நீட்சியை மேம்படுத்தும். இதனால் சருமம் சுருக்கமின்றி மென்மையாக மாறும்.

1. முல்தானி மெட்டி, கிளிசரின் மற்றும் தேனை தலா 1 டீஸ்பூன் கலந்து வழுவழுப்பான பேஸ்ட் ஒன்றை தயார் செய்திடுங்கள். அடித்த வெள்ளை கரு ஒன்றையும் அதனுடன் கலந்திடுங்கள்.

2. இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவுங்கள்.

3. இயற்கையாக பேஸ்ட் காயும் வரை, உங்கள் முக தசைகளை அசைக்காமல் அமைதியாக இருங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள்.

4. இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை பயன்படுத்துங்கள்.

பொடுகு சிகிச்சை

பொடுகு தொல்லைக்கு சிகிச்சை அளிக்க காலம் காலமாக முல்தானி மெட்டி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இது பொடுகை ஏற்படுத்தும் எண்ணெய், கிரீஸ் மற்றும் அழுக்கை உறிஞ்சிடும். கூடுதலாக, தலைச்சருமத்தில் உள்ள இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். தலைச்சருமத்தை சுத்தமாக வைக்க இது முக்கியமாகும்.

ஆரஞ்சு தோலின் பொடி மற்றும் முல்தானி மெட்டியை சரிசமமான அளவில் கலந்து, ஹேர் பேக் ஒன்றை தயார் செய்திடவும். இதனை தலைச்சருமத்திலும் முடியிலும் தடவுங்கள். 20 நிமிடங்களுக்கு பிறகு, தண்ணீரை கொண்டு தலையை கழுவுங்கள். மிதமான ஷாம்பு கொண்டு முடியை கழுவுங்கள். பொடுகை சிறந்த முறையில் குறைக்க இந்த வீட்டு சிகிச்சையை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பின்பற்றவும்.

மற்றொரு வழியும் உள்ளது – 4 டீஸ்பூன் முல்தானி மெட்டியுடன் எலுமிச்சை ஜூஸ் மற்றும் தேனை தலா 2 டீஸ்பூன் கலந்து கொள்ளவும். அதனுடன் 1/4 கப் தயிரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் சில துளிகள் தண்ணீரையும் கலந்து கொள்ளுங்கள். இதனை தலைச்சருமத்தில் தேய்த்து கொள்ளவும். 20 நிமிடங்களுக்கு பிறகு முடியை அலசவும். கடைசியாக ஷாம்பு கொண்டு முடியை கண்டிஷன் செய்யவும். இதனை வாரம் ஒரு முறை அல்லது மூன்று முறை செய்யவும்.

முடியின் நுனிகள் பிளவுபடுவதைத் தடுக்கும்

ஷாம்புவிற்கு சிறந்த மாற்றாக முல்தானி மெட்டி செயல்படும் என்பது அனைவரும் அறிந்ததே. முடியின் நுனிகள் பிளவுபடுவதை தடுக்க இது கண்டிஷனராகவும் செயல்படும். உங்கள் முடியை முல்தானி மெட்டி கொண்டு அப்பப்போ கழுவுங்கள். இதனால் உங்கள் முடி ஈரப்பதத்துடன் விளங்கி, நுனிகள் பிளவுபடுவது தடுக்கப்படும். மேலும் இரத்த ஓட்டத்தை இது ஊக்குவிப்பதால், கூந்தலை மென்மையாக்கி, பிரகாசமடையச் செய்து, வளர்ச்சியையும் மேம்படுத்தும்.

உங்களுக்கு முடியின் நுனிகள் ஏற்கனவே பிளவுபட்டிருந்தால், சூடான ஆலிவ் எண்ணெய் சிகிச்சையை பின்பற்றுங்கள். பின் முடியை முல்தானி மெட்டியுடன் பால் கலக்கப்பட்ட பேஸ்ட்டை கொண்டு கழுவுங்கள். மறுநாள் முடியை மிதமான ஷாம்பூவை கொண்டு கழுவுங்கள். இதனை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்திடவும்.

முடியை நேராக்கும்

நேரான, அடர்த்தியான, சிக்கல் இல்லா முடியை பெற முல்தானி மெட்டு உதவுகிறது.

1. 1 கப் முல்தானி மெட்டி, 5 டீஸ்பூன் அரிசி மாவு, 1 முட்டையின் வெள்ளை கரு மற்றும் போதிய நீரை கொண்டு, பேஸ்ட் ஒன்றை தயார் செய்யுங்கள்.

2. தூங்க செல்லும் முன்பு பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது வேறு ஏதாவது ஒரு எண்ணெய்யை தலைக்கு தடவிடுங்கள்.

3. மறுநாள் காலை, அகலமான சீப்பை கொண்டு தலை முடியை 4-5 தடவை வாரவும். பின் தலைச்சருமம் மற்றும் முடியில் இந்த ஹேர் பேக்கை தடவுங்கள். இதனை தடவும் போது, முடியை முடிந்த வரை நேராக வாரியபடி இருக்கவும்.

4. 40 நிமிடங்கள் கழித்து தண்ணீரை கொண்டு தலையை கழுவிடுங்கள்.

5. 1 1/2 கப் பாலை ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு தலையில் ஸ்ப்ரே செய்யவும்.

6. 15 நிமிடங்களுக்கு பிறகு மிதமான ஷாம்பு கொண்டு முடியை கழுவுங்கள். பின் கண்டிஷனரும் போட்டுக் கொள்ளுங்கள்.

7. மீண்டும் தலைக்கு குளிக்கும் வரை உங்கள் முடி நேராக இருக்கும்.

கால் அயர்ச்சியை போக்கும்

உங்கள் கைகளோ, கால்களோ, சோர்வடைந்தோ அல்லது காயமடைந்தாலோ முல்தானி மெட்டி பேஸ்ட்டை பயன்படுத்தி இரத்த ஓட்டத்தை தூண்டுங்கள். இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது உங்கள் இதயம், தசைகள் மற்றும் தமனிகள் கூட பயனடையும்.

1. முல்தானி மெட்டியுடன் தண்ணீர் கலந்து வழுவழுப்பான பேஸ்ட் ஒன்றை தயார் செய்யுங்கள்.

2. இந்த பேஸ்ட்டை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட இடங்களில் தடவவும்.

3. அது காய்ந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

4. இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை அல்லது மாதத்தில் சில முறை பின்பற்றவும்.

இறந்த அணுக்களை நீக்கும்

இறந்த அணுக்களை நீக்கவும் சருமத்தில் உள்ள அழுக்கை எடுக்கவும் முல்தானி மெட்டி உதவுகிறது. மாய்ஸ்சுரைசிங் ஃபேஸ் மாஸ்க் ஒன்றை தயார் செய்து, சருமத்தை சுத்தப்படுத்துங்கள். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். வறண்ட சருமத்தை கொண்ட அனைவருக்கும் இது சிறப்பாக செயல்படும்.

1. முல்தானி மெட்டி, கிளிசரின் மற்றும் தேனை தலா 1 டீஸ்பூன் கலந்து, பேஸ்ட் ஒன்றை தயார் செய்யவும்.

2. இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, இயற்கையாக காய விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவவும்.

3. இந்த மாஸ்க்கை வாரம் ஒரு முறை பயன்படுத்தவும்.

குறிப்பு

உங்கள் சருமத்தை அழகுப்படுத்தவும், முடிக்கு புத்துணர்வு அளிக்கவும் முல்தானி மெட்டி பெரிதும் உதவுகிறது. இனிமேல் இதற்காக அழகு சாதன நிலையம் சென்று, நீங்கள் சம்பாதித்த பணத்தை விரயம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அடுத்த முறை அழகு சாதன பொருட்கள் வாங்கும் போது, முல்தானி மெட்டி வாங்க மறந்து விடாதீர்கள்.

Related posts

தெரிந்துகொள்வோமா? உடல் சூட்டை தணிக்க சில ஸ்பெஷல் குளு குளு குளியல்கள்!!

nathan

சூப்பர் டிப்ஸ்..சருமம் சிவப்பு நிறமாதல், அத்துடன் பரு போன்ற புடைப்புகள்…

nathan

சருமத்தில் தேவையற்ற முடி வளர்ச்சியை தடுக்கும் பவுடர்

nathan

சருமம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க டிப்ஸ்

nathan

உடல் வனப்பாக..! டிப்ஸ்! அழகு குறிப்புகள்!!

nathan

பால் தரும் பட்டு போன்ற சருமம்

nathan

வாயைச் சுற்றியுள்ள பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

nathan

சரும வறட்சியை போக்கும் பால்

nathan

‘டிரை பிரஷ்ஷிங்’ பயன்படுத்துவது பற்றித் தெரியுமா?

sangika